இந்தியாவில் அதிகரிக்கும் Sleep Divorce! இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

Written ByYuvashree
Published: Apr 24, 2025, 12:29 PM IST|Updated: Apr 24, 2025, 12:29 PM IST

What Is Sleep Divorce In Tamil : இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாக Sleep divorce, அதாவது தூக்கத்தில் இருந்து தூக்க விவாகரத்து என்கிற ட்ரெண்ட் அதிகரித்திருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

What Is Sleep Divorce In Tamil : கடந்த சில ஆண்டுகளாக, திருமணங்கள் நடைபெறுவதை விட விவாகரத்துகள் அதிகமாக நடைப்பெற்று வருகிறது. இதற்கான காரணங்களும் காலத்திற்கு ஏற்றவாறு மாறி வருகிறது. இந்த நிலையில்தான், தற்போது தூக்க விவாகரத்து (Sleeping Divorce) கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு அர்த்தம் என்ன? இது இந்தியாவில் ட்ரெண்டாக காரணம் என்ன? இதோ அது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

அர்த்தம்1/7

அர்த்தம்

தூக்க விவாகரத்து என்பது திருமணமான தம்பதியினர் நல்ல ஓய்வை பெற தனித்தனியான படுக்கைகளில் தூங்குகின்றனர். அப்படியில்லையென்றால் தனித்தனி அறைகளில் தூங்குவதைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டுகிறது. 

ஏன் நடக்கிறது2/7

ஏன் நடக்கிறது

இதற்கு பொதுவான காரணங்களில் குறட்டை விடுதல், வெவ்வேறு நேரங்களில் உறங்குதல் உள்ளிட்டவை அடங்கும். உறவில் இருந்தாலும் ஒருவருக்கு, அதிக ஸ்பேஸ் தேவைப்படுவதால் இந்த தூக்க விவாகரத்து ஏற்படுகிறதாம்.

இந்தியாவில் அதிகரிப்பு3/7

இந்தியாவில் அதிகரிப்பு

இந்தியாவை பொறுத்தவரை, கணவன்-மனைவி இருவரும் ஒரே அறையில்தான் தூங்குகின்றனர். ஆனால், இந்த sleep divorce இந்தியாவில் தற்போது அதிகரிக்க காரணம், இது மனம் மற்றும் உடல் நலனை மேம்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டதால்தான்.

பிற்போக்கு4/7

பிற்போக்கு

இந்தியாவில், இப்படி ஒரு தம்பதி தனித்தனியே உறங்குவது தீண்டத்தகாததாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும், முதியவர்கள் இதற்கு எதிராக பேசி வருகின்றனர்.

மன நலன் உடல் நலன்5/7

மன நலன் உடல் நலன்

இப்படி தனித்தனியே உறங்குவதால் மன நலனும் உடல் நலனும் நன்றாக இருப்பதாகவும், மனநிலை மேம்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், தம்பதிகளுக்குள் இணக்கமும் அதிகரிக்குமாம்.

தோல்வியில் முடிந்த உறவா6/7

தோல்வியில் முடிந்த உறவா

இப்படி தனித்தனியே உறங்குவதால், அந்த உறவு முடிந்து விட்டது என்கிற அர்த்தம் இல்லை. இதனால் சண்டைகள் குறைவதோடு புரிதல் அதிகமாவதாகவும் கூறப்படுகிறது.

ட்ரெண்ட்7/7

ட்ரெண்ட்

இது தற்போது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. காரணம், நகரத்தில் வாழும் பலர் இதனை எக்ஸ்பரிமெண்ட் செய்து பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.