குழந்தை பெற்றுக் கொள்ள சரியான நேரம் எது தெரியுமா?
நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள யோசித்துக்கொண்டிருந்தால், அதற்கு முன், நீங்கள் ஏன் குழந்தையைப் பெற விரும்புகிறீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?. குழந்தை வளர்ப்பு (Parenting Tips) என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.
எந்தவொரு தவறான காரணத்திற்காகவும் ஒரு புதிய வாழ்க்கையை (குழந்தை) உலகில் கொண்டு வருவது தேவையற்ற வழியில் அதனுடன் சேர்ந்து உங்கள் வாழ்க்கையை பாதிக்கலாம். குடும்பக் கட்டுப்பாட்டில் இதுபோன்ற சில பொதுவான தவறுகளைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
பேரக்குழந்தைகளின் முகங்களை விரைவில் காட்டும்படி உங்கள் பெற்றோர் அல்லது மாமியார் அழுத்தம் கொடுக்கலாம். இந்த காரணத்துக்காக நீங்களும் உங்கள் பார்ட்னரும் குழந்தையின் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் விரும்பும் போது மட்டுமே குழந்தைகளைப் பெறுங்கள்.
உங்கள் பெற்றோர் அல்லது மாமியார் விரும்பும் போது அல்ல. உங்கள் குழந்தைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று உங்கள் குடும்பத்தினர் சொன்னாலும், பொறுப்புகளை நீங்களே கையாள மனதளவில் தயாராகும் வரை குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள்.
திருமணமான தம்பதிகள் கடினமான காலங்களை சந்திக்கும் போது,பலர் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள். இதற்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்னவென்றால், உங்கள் கவலைகளை மறக்கவும், உங்கள் உறவை மேம்படுத்தவும் குழந்தை உங்கள் இருவருக்கும் உதவும். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
பல ஆய்வுகளில், கணவன்-மனைவி இடையே உறவு மோசமடைந்து வருவதற்கு குழந்தைகளே காரணம் என்று பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தம்பதியினரிடையே நல்ல உறவு இல்லாத வரை, அவர்கள் குழந்தை பற்றி சிந்திக்கக்கூடாது.
திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளைப் பெறுவது கட்டாயமாகக் கருதப்படும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். உங்கள் உடலில் எந்தக் குறையும் இல்லை என்பதற்கு குழந்தை பெற்றுக் கொள்வதும் ஒரு சான்று. அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளைப் பெற முடியாதவர்கள் மிகவும் எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறார்கள். அதனால்தான் பல தம்பதிகள் விரும்பாவிட்டாலும் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் சில கனவுகள் இருக்கும், அதை தங்களால் பலர் நிறைவேற்ற முடியாதவர்கள், குழந்தைகள் மூலம் அதை முடிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் அப்படி செய்யவே கூடாது, குழந்தைகளுக்கு என சொந்த விருப்பம் இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வயதுடையவர்களைப் பார்த்த பிறகு குழந்தைகளைப் பெற வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால், அந்த அடிப்படையில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடாதீர்கள். உங்களுக்கான சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.