New Ration Card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துக்கு எப்போது ஒப்புதல் எப்போது கிடைக்கும்?

Ration card : ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

New Ration card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் அதிகாரிகள் எப்போது ஒப்புதல் கொடுப்பார்கள்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

1 /12

தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டு கோரி லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை மெதுவாகவே நடக்கிறது. 

2 /12

அண்மையில் வெளியான தகவலின்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த நிலையில், அதில் சரிபாதி விண்ணப்பங்களில் முறையான தகவல் இல்லை என்ற காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டன. 

3 /12

சில ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையிலேயே வைக்கப்பட்டன. அதாவது நிராகரிக்கப்படவும் இல்லை, ஒப்புதலும் கொடுக்கப்படவில்லை. அந்த விண்ணப்பங்கள் இந்த நிலையில் வைக்கப்பட்டதற்கு ஒவ்வொரு குறிப்பிட்ட விண்ணப்பங்களில் இருந்த குறைபாடுகள் அல்லது தகவல்களின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகங்கள் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன. 

4 /12

இருப்பினும் புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை என்பது மிக மெதுவாகவே நடக்கிறது. மூன்று நிலைகளைக் கடந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். வட்ட வழங்க அலுவலர் உள்ளிட்டோர் சமர்பிக்க ஆவணங்களை சரிபார்ப்பார்கள்.  

5 /12

அந்த ஆவணங்களின் உண்மை தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும். இதற்குப் பிறகு தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் கொடுப்பார். ஒவ்வொரு நிலையிலும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் மீதான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு என்பது மாதக்கணக்கில் நிலுவையில் வைக்கப்படுகிறது. 

6 /12

இதனால் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்க வேண்டுபவர்கள் சுமார் 6 மாதங்கள் கூட காத்திருக்க வேண்டியுள்ளது. சில அதிகாரிகள் உடனுக்குடன் அடுத்த நிலைக்கு அனுப்பவும் செய்கின்றனர். சில இடங்களில் இந்த காலதாமதத்தை தவிர்க்க முடியவில்லை.   

7 /12

ஒருவேளை இவ்வளவு நாட்களுக்குப் பிறகு புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அவர்கள் தவறுகளை சரி செய்து மீண்டும் விண்ணப்பிக்க நேரிடுகிறது. 

8 /12

இதனால் அவர்கள் மீண்டும் 6 மாதங்கள் வரை காத்திருக்க நேரிடலாம். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஆண்டுக்கணக்கில் புதிய ரேஷன் கார்டு கிடைக்க காத்திருக்க வேண்டிய சூழலுக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். 

9 /12

நடைமுறையில் இப்படியான சிக்கல்களை பலர் எதிர்கொள்கின்றனர். அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் விரைவாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதிகபட்சம் 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் என அண்மையில் கூட பேசியுள்ளார்.

10 /12

உண்மையில் ஒருசிலருக்கு வேண்டுமானால் அப்படி கிடைத்துவிடுகிறது. அதாவது அதிகாரிகள் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கும் சமயத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு இப்படி நடக்கிறது. மற்றபடி முன்கூட்டியே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் இருக்கிறது. 

11 /12

ரேஷன் கார்டு விண்ணபம் ஏற்பு  அல்லது நிராகரிப்பு என இரண்டில் எதுவாக இருந்தாலும் சீக்கிரம் தெரிந்துவிட்டால் அடுத்த வேலையை பார்ப்பார்கள். ஆனால் விண்ணப்பம் மீதான பரிசீலனை மாதக்கணக்கில் நிலுவையில் இருக்கும்போது, எந்த தேவைக்காக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தார்களோ அந்த வேலையையும் நிறைவேறாமல் நிலுவையில் வைக்க சூழலுக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். 

12 /12

அதனால், அரசு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களின் மீது உரிய நடவடிக்கையை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.