கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் எங்கு? எப்போது பெறுவது?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பங்கள் எங்கு, எப்போது கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்பத்தை எங்கு, எப்போது முதல் பெறுவது என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

1 /9

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai Scheme) திட்டம் தமிழ்நாடு அரசு ஜூன் 4 ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்வதற்காக பொதுமக்களிடம் விருப்ப மனுக்களை பெற உள்ளது.  

2 /9

அன்றைய நாளில் தமிழ்நாடு முழுவதும் 9000 சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. அன்று இதுவரை இந்த திட்டத்தில் பயனாளியாக இல்லாதவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற புதியதாக விண்ணப்பிக்கலாம். 

3 /9

தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமானோர் ரேஷன் கார்டு வைத்திருந்தாலும், ஒரு கோடியே 14 லட்சம் பேர் மட்டுமே பயனாளியாக இருக்கின்றனர். அதாவது, தமிழ்நாடு அரசு நிர்ணயித்த விதிமுறைகளை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள்.

4 /9

அதற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான தகுதிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்தால், தாராளமாக  விண்ணப்பிக்கலாம்.  

5 /9

ஜூன் 4 ஆம் தேதி முதல் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆனால், விண்ணப்பம் எங்கு பெறுவது, எப்போது முதல் பெறுவது என்ற விவரத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்கவில்லை.

6 /9

இதுதொடர்பான குழப்பம் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மே 29ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது என தெரிவிக்கின்றன. அதிலும் எங்கு எப்போது பெறுவது என்ற தகவல் இல்லை.

7 /9

சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் கிடைக்குமா? அல்லது கிராம நிர்வாக அலுவலர் அல்லது ஊராட்சி மன்றம் வழியாக விநியோகிக்கப்பட உள்ளதா? என்ற விவரம் தெரியவில்லை.

8 /9

இன்னும் ஒரு சில நாட்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்பங்களை எங்கு பெறுவது என்ற முழு விவரத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிட வாய்ப்புள்ளது.   

9 /9

அதன்பிறகே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பது தொடர்பான முழு தெளிவும் பொதுமக்களுக்கு கிடைக்கும். அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டியது மட்டுமே இப்போதைய அப்டேட்.