சுந்தரபாண்டியன் நடிகை லக்‌ஷ்மி மேனன்..இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க! வைரல் போட்டோஸ்..

Where Is Sundarapandian Actress Lakshmi Menon? கேரள நடிகையான லக்‌ஷ்மி மேனன், சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். அவர் இப்போது பார்க்க எப்படியிருக்கிறார் தெரியுமா?

Where Is Sundarapandian Actress Lakshmi Menon? கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்த நடிகைகள் பல பேர் இருக்கின்றனர். அப்படி வந்து பிரபலமானவர்களுள் ஒருவர் லக்‌ஷ்மி மேனன். மிக சிறிய வயதிலேயே புகழ்பெற்ற நாயகியாக மாறிய இவர், தமிழில் அறிமுகமானது, சுந்தர பாண்டியன், கும்கி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாகத்தான். ஆரம்பத்தில் வரிசையாக படங்களில் நடித்து கொண்டிருந்த இவர், கடந்த சில வருடங்களாக திரையுலகில் பெரிதாக ஆக்டிவாக இல்லை. இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

1 /7

மலையாளத்தில் திரையுலகை எட்டிப்பார்த்த லக்‌ஷ்மி மேனனுக்கு, பெரிய புகழை தேடித்தந்தது தமிழ் திரையுலகம். இவர், மலையாள இயக்குநர் வினயனின் மகள் ஆவார். இவரது தாயும் துபாயை சேர்ந்த ஒரு நடன கலைஞர் ஆவார்.

2 /7

லக்‌ஷ்மி மேனனை பலருக்கு அறிமுகம் செய்து வைத்த படம், சுந்தர பாண்டியன். இந்த படத்தில் அவர் அர்ச்சனா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

3 /7

நடித்த முதல் படம் கும்கி-யாக இருந்தாலும், முதலில் வெளியானது சுந்தர பாண்டியன்தான். கும்கி படத்தில் நடித்த போது அவருக்கு வயது 14தான்.

4 /7

லக்‌ஷ்மி மேனன், தொடர்ந்து, தெலுங்கிலும் சில பட்னகளில் நடித்து வந்த லக்‌ஷ்மி, விஷாலுடன் 2 படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அதன் பிறகு வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.

5 /7

கடந்த 10 ஆண்டுகளில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருக்கும் லக்‌ஷ்மி மேனன், 2023ல் சந்திரமுகி படத்தில் நடித்தார். அதன் பிறகு வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

6 /7

இவர் திரையுலகிற்கு வந்த புதிதில், பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பட்டது. ஆனால், அவருக்கு நினைத்தது போல சில படங்கள் கைக்கொடுக்கவில்லை. 

7 /7

லக்‌ஷ்மி மேனன் எங்கே எங்கே என்று அனைவரும் தேடி வந்த நேரத்தில், அவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 27 வயதாகும் லக்‌ஷ்மி மேனன், இப்போது பார்க்க ஆளே மாறி விட்டதாக சிலர் கூறி வருகின்றனர்.