IPL Playoffs Qualification Chances: இந்த பரபரப்பான ஐ.பி.எல் தொடரின் நடுவே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டன. தற்போது சூழ்நிலை சீராகி விட்டதால், நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ளன.
IPL Playoffs Qualification Chances: 18-வது ஐ.பி.எல். சீசன், ரசிகர்களின் ஆதரவுடன் மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவின் பல நகரங்களில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாடி, முதல்நிலை 4 இடங்களைப் பெறும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தேர்வாகின்றன.
அடுத்த சுற்று யாருக்கு?: இந்த நிலையில் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையப்போகின்றது என்பது தொடர்ந்து வரும் முடிவுகள் மற்றும் ரன் ரேட் எனும் கணக்கீடுகளால் தீர்மானிக்கப்படும்.
பிளே ஆப் போட்டிக்கு நெருங்கும் குஜராத்(Gujarat Titans): 11 போட்டிகளில் 16 புள்ளிகள் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் நிச்சயமாக பிளே ஆப் சுற்றை எட்டும்.
ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் பெங்களூரு(Royal Challengers Bangalore): 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மீதமுள்ள போட்டிகளில் வெற்றியடைந்தால் பிளே ஆப்பில் கலந்துகொள்ளும். தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் முடிவுகள் அவசியம் ஆதரவாக அமையவேண்டும்.
வழக்கம்போல் போராடும் பஞ்சாப்(Punjab Kings): பஞ்சாப் கிங்ஸ் தற்போது 15 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் 2 வெற்றி கண்டால் பிளே ஆப்புக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகம்.
மும்பை இந்தியன்ஸ் நிலை உறுதி(Mumbai Indians): 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள மும்பை அணி, மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று உறுதி. தோல்வி ஏற்பட்டால் மற்ற அணிகளின் முடிவுகள் அவசியம் தேவைப்படும்.
தடுமாறும் டெல்லி கேப்பிடல்ஸ்(Delhi Capitals): டெல்லி அணி 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப்புக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
மங்கும் கொல்கத்தா நம்பிக்கை(Kolkata Knight Riders): 12 போட்டிகளில் வெறும் 11 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகள் தோல்வியடைய வேண்டியது அவசியம்.
மிகுந்த நம்பிக்கையுடன் லக்னோ(Lucknow Super Giants): 11 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்றுள்ள லக்னோ அணி, மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு. அதற்கும் மேலாக ரன் ரேட் மேம்பாடு அவசியம்.