ஐபிஎல்-இல் அதிக அரைசதங்களை பதிவு செய்த அணிகள் – உங்கள் ஃபெவரைட் டீம் இருக்கா லிஸ்ட்ல?

IPL Most Half-Centuriesஅதிக அரை சதங்கள் பெற்ற டாப் அணிகளில் இந்த 3 அணிகள் அட்டகாசமாக விளையாடியுள்ளனர். இந்த அணிகளின் திறனாலும் நிலைத்த பார்மான்ஸாலும் பல மறக்க முடியாத இன்னிங்ஸ்களை வழங்கி, ஐபிஎல் ரசிகர்களை எப்போதும் கவர்ந்துவந்துள்ளன.

half-centuries IPL records: ஐபிஎல் வரலாற்றில் அதிக அரை சதங்கள் பதிவு செய்த அணிகள், அவர்களின் பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தும் முக்கிய அணிகள் உள்ளன. தொடர்ச்சியான செயல்திறன் மற்றும் தரமான பேட்டிங் மூலம், எதிரணி பந்துவீச்சாளர்களை வெற்றிகரமாக சமாளித்து, இந்த அணிகள் பல அரை சதங்களை குவித்துள்ளன. இதனால், இவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

1 /9

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்(Lucknow Super Giants): தொடரின் சமீபத்திய அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இதுவரை 58 அரை சதங்களை மட்டுமே பதிவு செய்துள்ளது.  

2 /9

சன்ரைஸஸ் ஹைதராபாத்(Sunrises Hyderabad): அரைகால ஐபிஎல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த சன்ரைஸஸ் ஹைதராபாத், 163 அரை சதங்களை பதிவு செய்துள்ளது.

3 /9

ராஜஸ்தான் ராயல்ஸ்(Rajasthan Royals): முதல் ஐபிஎல் சாம்பியனாக களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 171 அரை சதங்களுடன் முன்னிலையில் உள்ளது.

4 /9

பஞ்சாப் கிங்ஸ்(Punjab Kings): சாம்பியன் பட்டம் கைவராதிருந்தாலும், பஞ்சாப் கிங்ஸ் 198 அரை சதங்களுடன் தன்னை நிரூபித்துள்ளது.

5 /9

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight Riders): இரு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 203 அரை சதங்களை பதிவு செய்து நம்பகத்தன்மை பெற்ற அணியாக வலம் வருகிறது.  

6 /9

டெல்லி கேப்பிடல்ஸ்(Delhi Capitals): பலமுறை பெயர் மாற்றம் கண்ட டெல்லி கேப்பிடல்ஸ், 213 அரை சதங்களை பதிவு செய்து தாக்குதல் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது.

7 /9

மும்பை இந்தியன்ஸ்(Mumbai Indians): ஐபிஎல் வரலாற்றில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற மும்பை இந்தியன்ஸ், 218 அரை சதங்களை பதிவு செய்துள்ளது.

8 /9

சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings): முழுமையான அணிச்சேர்க்கைக் கொண்ட சிஎஸ்கே, மும்பையை நிகர்த்து 218 அரை சதங்களை பதிவு செய்துள்ளது.

9 /9

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(Royal Challengers Bangalore): இன்னும் சாம்பியன் பட்டம் வெல்லாததாலும், 240 அரை சதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் திகழும் பெங்களூர் அணி தாக்கமிக்க ஆட்டத்தை தொடர்கிறது.