TN government scheme : பெண் குழந்தை பெயரில் தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
TN government scheme : பெண் குழந்தைகள் பெயரில் தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என தெரிந்து கொள்ளுங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் (Chief Minister Girl Child Protection Scheme) கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இத்திட்டம் ஒரு வைப்புத் தொகை திட்டமாகும். ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அப்பெண் குழந்தைக்கு ரூபாய் 50,000 தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக சேமித்து வைக்கப்படும்.
இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ரூபாய் 25,000 வீதம் வைப்புத் தொகை சேமித்து வைக்கப்படும். அவ்வாறு சேமித்து வைக்கப்பட்ட நிதியின் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ள சார்ந்த பெண் குழந்தை 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வருமான சான்று (ரூ.1,20,000க்குள்), பயனாளியின் சாதி சான்று, வயது சான்று (பிறப்பு சான்று அல்லது பள்ளிக் கல்வி சான்று) கொடுக்க வேண்டும்.
பயனாளியின் இருப்பிடச் சான்று, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சான்று (40 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்க வேண்டும்,
ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இரண்டாவது பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம் ஆகிய சான்றுகள் வைத்திருக்க வேண்டும்.
இவற்றுடன் அருகில் உள்ள இசேவை மையத்திற்கு சென்று உடனடியாக விண்ணப்பிக்கலாம்.