Kalaingar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து 3 ஆயிரம் ரூபாய் மாதம் யாரெல்லாம் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Kalaingar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் (Kalaingar Magalir Urimai Thogai) சேர்த்து குறிப்பிட்ட சிலர் மட்டும் மாதம் மூவாயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். அவர்கள் யார்? என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
1/9தமிழ்நாடு அரசு வெகு சிறப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன.
2/9இந்த திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருந்து வரும் நிலையில் விரைவில் புதிய பயனாளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட இருக்கின்றனர். சரியான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.
3/9இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து மாதம் மூவாயிரம் ரூபாய் பெறலாம். ஆனால் இந்த தொகை எல்லோருக்கும் கிடைக்காது. வீட்டில் கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள் இருவரும் இருக்க வேண்டும்.
4/9ஆம், உங்கள் வீட்டில் கல்லூரி படிக்கும் மாணவர் மற்றும் மாணவி இருந்தால் அவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் என இரண்டாயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது.
5/9
6/9தமிழ் வழிக் கல்வியில் அவர்கள் இருவரும் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி படிப்பவர்களாக இருத்தல் வேண்டும். அப்படி இருந்து, நீங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று, உங்கள் வீட்டில் இருக்கும் மாணவர் மற்றும் மாணவி கல்லூரியில் இந்த இரு திட்டங்கள் வழியாக இருவரும் தலா மாதம் ஆயிரம் பெற்றார்கள் என்றால் மூவாயிரம் ரூபாய் கிடைக்கும்.
7/9இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு வீட்டில் இரண்டு மாணவிகள், அல்லது இரண்டு மாணவர்கள் என எத்தனை பேர் இருந்தாலும் இந்த திட்டத்தின் வழியாக ஒவ்வொருவரும் பயன்பெற முடியும். ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டுமே உதவித் தொகை கிடைக்கும் என்ற எந்த நிபந்தனையும் இந்த திட்டதில் இல்லை.
8/9எனவே கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் வழியாக பயன்பெற முடியும். அதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இதுவரை வாங்காதவர்களாக இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும்.
9/9இன்னும் மூன்று மாதங்களில் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.