Who Is Actor Dharmendra : இந்திய திரையுலகின் பிரபல நடிகரான தர்மேந்திரா, காலமானதாக தகவல் வெளியானதை அடுத்து அவர் உயிரிழக்கவில்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
Who Is Actor Dharmendra : இந்திய திரையுலகின் மூத்த நடிகராக இருக்கிறார், தர்மேந்திரா. 89 வயதாகும் இவர், உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இவர் இறந்து விட்டதாக செய்திகள் பரவின, இதை பார்த்து அதிர்ச்சியான அவரது குடும்பத்தினர், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இறக்கவில்லை என்றும் கூறினர். இதையடுத்து இவர் குறித்த சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்திய திரையுலகில் பிரபல நட்சத்திரமாக விளங்குபவர் தர்மேந்திரா. 89 வயதாகும் இவர், இதுவரை 300க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை ஹிட் அடித்துள்ளன.
பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகரான தர்மேந்திரா, சோலே, சுப்கே சுப்கே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர், டீன் ஏஜில் இருக்கும் போதே திரையுலகிற்குள் நுழைந்து விட்டார்.
தர்மேந்திரா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து அவர் இறந்ததாக அதிர்ச்சிக்குரிய செய்தி வெளிவந்தது. இதனை மறுத்துள்ள அவரது குடும்பத்தினர், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இது தவறான செய்தி என்றும் தெரிவித்தனர்.
தர்மேந்திராவிற்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். தனக்கு 19 வயதாக இருக்கும் போது தர்மேந்திரா, 1954ஆம் ஆண்டில் பிரகாஷ் கவுர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம் எனக்கூறப்படுகிறது. திருமணம் செய்து கொண்ட காலக்கட்டத்தில்தான் தர்மேந்திரா வளரும் நட்சத்திரமாக இருந்தார்.
தர்மேந்திரா-பிரகாஷ் கவுர் ஜோடிக்கு சன்னி டியோல் மற்றும் பாபி டியோல் என இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களும் பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்கள் ஆவர். இவர்களை தவிர இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
தர்மேந்திரா, 1980ஆம் ஆண்டில் நடிகை ஹேமமாலினியை மணந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக பல படங்களில் சேர்ந்து நடித்தனர். முதல் மனைவியுடன் இருக்கும் போதே தர்மேந்திரா ஹேமமாலினியை திருமணம் செய்தது அந்த காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹேமமாலினிக்கு தர்மேந்திராவுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
ஆறு பிள்ளைகளுக்கு தந்தையான தர்மேந்திரா சுமார் ரூ.450 கோடி சொத்துக்கு அதிபதி என கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக வீடு, ரெசார்ட் உள்ளிட்ட பல இருக்கின்றனவாம்.