ட்ரெண்டிங் நடிகை ருக்மிணியின் தந்தை யார் தெரியுமா? நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர்..

Written ByYuvashree
Published: Oct 07, 2025, 10:54 AM IST|Updated: Oct 07, 2025, 10:54 AM IST

Who Is Actress Rukmini Vasanth Father : இந்திய திரையுலகில் தற்போதைய ட்ரெண்டிங் நடிகையாக இருப்பவர், ருக்மிணி வசந்த். இவரது தந்தை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Who Is Actress Rukmini Vasanth Father : சமீபத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர், ருக்மிணி வசந்த். இவர் இதற்கு முன்னர், இன்னும் சில கன்னட படங்களிலும் நடித்து பிரபலம் ஆகியிருக்கிறார். இந்த நடிகையின் தந்தை குறித்து தெரிந்து கொண்ட நெட்டிசன்கள், இதனை வைரலாக்கி வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

Rukmini Vasanth1/7

ருக்மிணி வசந்த்

சப்தசாகர் தாதி என்கிற படம் மூலமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர், ருக்மிணி. இவரது நடிப்பை முதல் படத்திலேயே பார்த்து, ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

Kantara Actress2/7

காந்தாரா நடிகை

ருக்மிணி, கன்னட படங்களில் மட்டுமல்ல, தமிழ் படமான மதராஸி படத்திலும் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் ஆன இவரது ஜோடி, பலரை ஈர்த்தது. சமீபத்தில், ரிஷப் ஷெட்டியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Family3/7

குடும்பம்

ருக்மிணியை திரையில் பார்க்கும் பலருக்கு, அவர் ஒரு பெருமைக்குரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதே தெரியாது. அதிலும், அவரது தந்தை இந்த நாட்டிற்காக பெரிய தியாகத்தை செய்தவர்.

Dad4/7

தந்தை

ருக்மிணியின் தந்தையின் பெயர் வசந்த் கோபால். முழுமையாக சொல்ல வேண்டுமென்றால் கர்னல் வசந்த் கோபால்.  ருக்மிணி, சிறு வயதில் இருக்கும் போதே அவர் வீர மரணம் அடைந்து விட்டாராம். 

Achievements5/7

சாதனைகள்

2007ஆம் ஆண்டு, 8 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பிடிக்கும் ஆப்ரேஷனின் போது, இவரது தலைமையிலான குழு போராடி இருக்கிறது. அப்போது அவர் இறந்துள்ளார்.

Indias Pride6/7

இந்தியாவின் பெருமை

பயங்கரவாதிகளுடனான சண்டையில், வசந்தின் மார்பில் 7க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. இதையற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். இவரது தியாகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு அவருக்கு அசோக சக்ரா பதக்கத்தை வழங்கி கௌரவித்தது.

Viral News7/7

வைரல்

கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்த பதக்கத்தை பெற்ற முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு பிறகு, ருக்மிணியின் தந்தை குறித்த இந்த செய்தி வைரலாகி வருகிறது.