ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹைகா சர்மா யார்? சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Hardik Pandya: ஹர்திக் பாண்டியாவின் காதலியும், மாடலுமான மஹைகா சர்மா யார், அவரது கல்வித்தகுதி என்ன, அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Hardik Pandya New Girlfriend Mahieka Sharma: ஹர்திக் பாண்டியா கடந்த 2024ஆம் ஆண்டில் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிந்தார். அதன்பின், சில மாதங்களிலேயே அவர் மஹைகா சர்மாவை டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது தற்போது உறுதியாகி உள்ளது.

1 /8

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) இன்று (அக். 11) அவரது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளுக்கு முந்தைய நாள், அதாவது நேற்று அவர் தனது காதல் உறவை பொதுவெளியில் அறிவித்தார் எனலாம்.   

2 /8

ஹர்திக் பாண்டியா, மாடலான மஹைகா சர்மா (Mahieka Sharma) உடன் காதல் உறவில் இருக்கிறார் என பல மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டனர். மஹைகாவும், ஹர்திக் பாண்டியாவும் பரஸ்பரம் இன்ஸ்டாகிராம் ஒருவரையொருவர் பின்பற்றியபோதே, இருவரும் டேட்டிங் செய்வதாக கிசுகிசு எழுந்தது. இந்த ஜோடி நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்தில் முதன்முதலில் தென்பட்டனர்.   

3 /8

அதன்பின் ஹர்திக் பாண்டியா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், அவரும் மஹைகா சர்மாவும் இருக்கும் பல்வேறு புகைப்படங்களை நேற்று பதிவிட்டிருந்தார். அதில் கடற்கரையோரத்தில் மஹைகா சர்மாவின் கழுத்தை கட்டியணைத்தபடி ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதேபோல் பால்கனியில் இருவரும் கைக்கோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.   

4 /8

ஹர்திக் பாண்டியா பதிவிட்ட இந்த புகைப்படங்களும், அவர்கள் விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாள்களாக வைரலாகி வருகிறது. புகைப்படங்கள் வைரலாக தொடங்கியபோது, ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹைகா சர்மா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், அவர் யார்?, அவரின் கல்வி, அவரின் சொத்து மதிப்பு ஆகியவை குறித்து இங்கு காணலாம்.   

5 /8

24 வயதான மஹைகா சர்மா மாடல் மற்றும் நடிகை ஆவார். பிட்னஸ் குறித்தும் இன்ஸ்டாகிராமில் அதிகம் வீடியோக்களை பதிவிடுபவர்.  இவர் டெல்லியைச் சேர்ந்தவர். சமூக வலைதங்களில் பிரபலமாக அறியப்படுபவர்.   

6 /8

இவர் நாட்டின் பல பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த ஆடைகளுக்கு மாடலாக இருந்துள்ளார். Tanishq, Vivo, Uniqlo உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் பேஷன் விருது விழாவில் சிறந்த மாடல் விருதை பெற்றுள்ளார்.   

7 /8

மஹைகா சர்மா டெல்லியில் பயின்றவர். பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் இவர் பொதுவெளியில் மிக நம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் திகழ்கிறார்.   

8 /8

இவர் பொழுதுபோக்கு துறையில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார். மாடலாகவும், பிட்னஸ் மாடலாகவும் அறியப்படும் இவருக்கு சுமார் ரூ.3.20 கோடி சொத்து மதிப்பை வைத்திருக்கிறார் என தகவல்கள் கூறப்படுகிறது.