Which God's Personality Matches Your Zodiac: உங்க ராசிக்கு எந்த கடவுள்? நீங்கள் எந்த கடவுளின் அம்சத்தில் பிறந்திருக்கீங்க? போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
Who Is The God For 12 Zodiac Signs: ஜோதிட சாஸ்திரங்களில் 12 ராசிகளுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கடவுள்களை நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த வகையில் நீங்கள் பிறந்த உங்கள்ளுடைய ராசிக்கும் ஏதாவது ஒரு கடவுளுடைய குணம் நிச்சயமாக இருக்கும். எனவே உங்கள் ராசிக்கு எந்த கடவுள்? எந்த கடவுளின் அம்சத்தில் நீங்கள்ள் பிறந்து இருக்கிறீர்கள்? போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
உங்கள் ராசிக்கு எந்த கடவுள்? எந்த கடவுளின் அம்சத்தில் நீங்கள்ள் பிறந்து இருக்கிறீர்கள்? போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
முதல் ராசியான மேஷ ராசியாக இருந்தால் உங்களுக்குரிய கடவுள் முருகப்பெருமான். நீங்கள் எந்த விசியத்திலும் துணிச்சலோடும் வீரத்தோடும் செயல்படக்கூடியவர்களாக இருப்பீர்கள். எப்பேர்ப்பட்ட தடைகள் வந்தாலும் அந்த தடைகளை தகர்த்தெறிந்து சரித்திரம் படைக்கக்கூடிய இயல்பு உங்களிடம் இயற்கையாகவே குடிகொண்டிருக்கும். அதே சமயம் எதற்கும் அஞ்சாமல் வாழ்வில் நேர்மையான வழியில் பயணம் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பீர்கள். அதனால இந்த மேஷ ராசியில் பிறந்த நபர்கள் முருக வழிபாடு செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்வில் மேலும் மேலும் நன்மைகள் உண்டாகும்.
உங்கள் ராசி ரிஷபமாக இருந்தால், நீங்கள் லக்ஷ்மி தேவி போல் மிகுந்த பொறுமைசாலிகளாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தை தேடி செல்வம் தானாகவே வரும். அது மட்டும் இல்லாம உங்கள் மனதளவில் நீங்கள் மிகவும் அழகான நபர்களாக இருப்பீர்கள். அதுமட்டுமில்லாம் உங்கள் புத்திக் கூர்மையாக இருக்கும். ஆடினால் ரிஷப ராசிக்காரர்கள் லக்ஷ்மி தேவி போல் என்றுமே மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களுடைய ராசி மிதுனமாக இருந்தால், நீங்கள் விஷ்ணு பகவானின் அம்சம் பொருந்தியவர்களாக இருப்பீர்கள். நாராயணனின் குணங்கள் உங்களிடம் இருப்பதால் அதிகளவான புத்தி சாதுரியம், புத்திக்கூர்மை, தெளிவான வியூகம் வகுத்து வாழ்வை வாழக்கூடியவர்களாக இருப்பீர்கள். அறிவே உங்கள்ளுடைய ஆயுதமாக இருக்கும். அதே சமயம் வாழ்வை கொண்டாட்டகரமாக வாழக்கூடியவர்களாகவும் இருப்பீர்கள். அதனால மிதுன ராசிக்காரர்கள் விஷ்ணு பகவானை போன்று சந்தோஷமாக வாழுங்கள்.
அடுத்ததா உங்கள் கடக ராசியாக இருந்தால், ராமர் போல் துணிச்சல், வீரம், நேர்மை, தர்மம் போன்ற குணங்கள் இந்த கடக ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் அன்பு செலுத்துவதில் எப்போதுமே குறை வைக்கவே மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தின் மீது அதீத அக்கறையும், அன்பையும் வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்பீர்கள். இந்த மாதிரி ராமருடைய குணங்கள் உங்களுக்கு அதிகளவாக இருப்பதால் பெண்களை போற்றக்கூடியவர்களாகவும் நேர்வழியில் வாழ்வை வாழக்கூடியவர்களாகவும் இருப்பீர்கள். ஆடினால் ராமரைப் போன்று என்றுமே தர்மத்தின் பாதையில் செல்லுங்கள்.
அடுத்ததாக சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன கடவுள் எனப் பார்ப்போம். சிம்ம ராசிக்காரர்கள் சூரியநாராயணன் போல் பிரசன்ன ஆளுமையும் தலைமைத்துவ பண்பும் கொண்டவர்கள். அதே சமயத்தில் எந்த ஒரு விசியத்தையும் புத்தி சாதுரியத்தின் காரணமாகவும் உங்கள்ளுடைய பேச்சாற்றலின் மூலமாகவும் உங்களுக்கு சார்பாக நிர்ணயிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். எப்பொழுதுமே தாமதம் அப்படிங்கறது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் செய்ய வேண்டியவற்றை சரியாக செய்யக்கூடிய இயல்பு கொண்டவர்களாகவும் இருப்பீர்கள். அதனால சூரியநாராயணன் போல் எந்த விடசியத்தையும் நேர்வழியில் செய்யுங்கள்.
அடுத்ததாக கன்னி ராசி, கிருஷ்ணரைப் போல் புத்திக்கூர்மையும் ஞானத்தெளிவும் கலை அறிவும் உங்கள்ளிடம் இயல்பாகவே இருக்கும் பெண்களைப் போற்றக்கூடியவர்களாகவும், அனைவர் மீதும் பாகுபாடுன்றி அன்பை பொழியக்கூடியவர்களாகவும் இருப்பீர்கள். அனைவரையும் சமத்துவமாக நடத்த வேண்டும் என்ற உங்களுடைய குணமாக இருக்கும். அதே சமயம் எந்த ஒரு சியத்தையும் சிந்தித்து ஆராய்ந்து செயல்படுத்தக் கூடியவர்களாக இருப்பீர்கள். கன்னி ராசிக்காரர்கள் கிருஷ்ணரைப் போன்று சிந்தித்து செயலாற்றுங்கள்.
அடுத்ததாக துலாம் ராசி, சரஸ்வதி தேவி போல் கல்வி ஆளுமையும், ஞானத்தெளிவும் கொண்டவர்களாக இருப்பீர்கள். எந்த விசியத்தையும் சமநிலையாக பார்க்கக் கூடியவர்களாகவும், இன்ப துன்பத்தை சமநோக்கோடு அணுகக்கூடியவர்களாகவும் இருப்பீர்கள். அதனால சரஸ்வதி தேவி போல் கல்வி ஆளுமையுடன் இருங்கள்.
அடுத்ததாக விருச்சிக ராசி, பரசுராமர் போல் நேர்மையான வழியில் துணிச்சலோடும் வீரத்தோடும் செல்லக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அநீதிக்காக நீதியை ஒருபொழுதுமே விட்டுக் கொடுக்கவும் மாட்டீர்கள். அதனால் பரசுராமர் போல் துணிச்சலோடு நேர்மையான வழியில் செல்லுங்கள்.
அடுத்ததாக தனுசு ராசி ஆஞ்சநேயர் போல் அதீத ஆளுமையும் துணிச்சலும், அஞ்சாத நெஞ்சமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆஞ்சநேயருடைய குணங்கள் உங்களிடம் இருப்பதால் தெய்வ பக்தியிலும் உங்ளை வெல்வதற்கு யாராலுமே முடியாது. ஆஞ்சநேயர் போன்று எப்பொழுதுமே செயல்படுங்கள். அனைத்திலுமே வெற்றியினை பெற முடியும்.
அடுத்ததாக மகர ராசி, பார்வதி தேவியின் அவதாரமான துர்க்காதேவியின் அம்சம் உங்களிடம் இருப்பதால் எந்த விடயத்திலும் துணிந்து செயல்படக்கூடியவர்களாகவும், அநீதியை தட்டிக் கேட்கக் கூடியவர்களாகவும் இருப்பீர்கள். அதனால துர்க்காதேவி போல் எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுங்கள்.
அடுத்ததாக கும்ப ராசி, சர்வேஸ்வரனான பரமேஸ்வரனுக்குரிய அம்சம் பொருந்தியவர்கள் தான் இந்த கும்ப ராசிக்காரர்கள். அதனாலயே உங்களிடம் ஆளுமைப் பண்பு தலைமைத்துவப் பண்பு பேச்சாற்றல் அமைதிக் குணம், ஞானத்தெளிவு போன்றவை மிகையாகவே இருக்கும். ஆடினால் என்றுமே அந்த ஈசனைப் போன்று முன்மாதிரியாக வாழுங்கள்.
அடுத்து கடைசியாக மீன ராசி, பிரம்மதேவரின் அம்சம் பொருந்திய நீங்கள் எந்த விசியத்தையும் புதுமையாக சிந்திக்கக் கூடியவர்களாகவும், புதிய விசியங்களை படைக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பீர்கள். அதிக அளவில் கற்பனைத் திறனும் புதிய சிந்தனைகளும் எப்போதுமே உங்கள்ளுக்குள் உதயமாகிக் கொண்டே இருக்கும். அதனால பிரம்மதேவரைப் போன்று ஞானத்தெளிவோடு இருந்து புதிய விசியங்களை படைக்கும் ஆற்றலை பெறுங்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.