IPL 2025: 18வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.
Mumbai Indians Playing XI: மும்பை இந்தியன்ஸ் அணியில் இம்பேக்ட் பிளேயராக கடந்த ஆண்டு ரோகித் சர்மா இறங்கினார். ஆனால் இந்த ஆண்டு அவரை அணியின் பிரதான வீரராகவே இறங்குவார் என தகவல்கல் வெளியாகி உள்ளது. அப்படி செய்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் இம்பேக்ட் பிளேயர் யாராக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், இம்பேக்ட் பிளேயர் யாராக இருக்கலாம், மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
ரோகித் சர்மா கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இம்பேக்ட் வீரராக களம் இறங்கினார். ஆனால் இம்முறை அவர் அணியின் பிரதான வீரராகவே களம் இறங்குவார் என்றும் அவர் இம்பேக்ட் வீரராக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி-யில் இருந்த வில் ஜாக்ஸை மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இந்நிலையில், அவர் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் பேட்ஸ்மேன் நமன் தீர் கடந்த ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்றாவது இடத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4வது இடத்தில் களம் இறங்க வாய்ப்புள்ளது.
இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் திலக் வர்மா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5வது இடத்தில் இறங்க வாய்ப்புள்ளது. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியை பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து தனது பேட்டிங்கின் மூலம் காப்பாற்றி உள்ளார்.
கடந்த ஐபிஎல்லில் குஜராத் அணியில் இருந்து மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த முறை அவரால் சரியான பங்களிப்பை அளிக்க முடியவில்லை. ஆனால் இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்கண்டைச் சேர்ந்த வீரர் ராபின் மின்ஸ். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7வது இடத்தில் பேட்டிங் செய்வார்.
மும்பை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர். இவர் மெதுவாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட்களுக்கு அடிக்க தூண்டி விக்கெட்களை வீழ்த்தக்கூடியவர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அல்லா கசான்ஃபருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஐபிஎல் 2025 இன் வரவிருக்கும் சீசனில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்.
சென்னை அணியின் முக்கிய பந்து வீச்சாளராக இருந்த தீபக் சாஹர், ஏலத்தில் மும்பை அணி வாங்கியது. இவர் பந்து வீச்சில் சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடியவர். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் திறன்பட விக்கெட்களை வீழ்த்தக்கூடியவர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, தற்போது காயத்தில் அவதிபட்டு வருகிறார். இதனால் அவர் முதல் இரண்டு வாரத்திற்கு நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.
ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இம்பேக்ட் வீரராக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் களமிறங்க வாய்ப்புள்ளது.