பிரியங்காவை திருமணம் செய்தவர் இவ்ளோ பெரிய ஆளா? இவர் யார் தெரியுமா?

Who Is Vasi Sachi Priyanka Second Husband : பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மணம் முடித்திருக்கும் நபர் யார் தெரியுமா?

Who Is Vasi Sachi Priyanka Second Husband : தொகுப்பாளர் பிரியங்கா குறித்த செய்திகள்தான் தற்போது இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது. காரணம், அவருக்கு நேற்று திருமணம் முடிந்தது. இவர், 2016ல் பிரவீன் குமார் என்பவரை காதல் திருமணம் செய்திருந்தார். ஆனால், அந்த திருமணம் சில ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிந்தது. இந்த நிலையில், தற்போது இரண்டாவதாக ஒருவரை திருமணம் முடித்திருக்கிறார். அந்த நபர் யார் தெரியுமா?

1 /7

தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களுள், மிகவும் பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடகாவில் பிறந்த இவர், சென்னையில்தான் படித்து வளர்ந்தார். ஆரம்பத்தில், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், அதன் பிறகு அதை விட பெரிய நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக மாறினார்.

2 /7

பிரியங்கா, பிரவீன் குமார் என்பவரை 2016ல் காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது. தனது வாழ்க்கை குறித்து பெரிதாக எங்கும் வெளியில் பேசாத பிரியங்கா, தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை கூட வெளியில் சொல்லவில்லை.

3 /7

பிரியங்காவிற்கு, ஏப்ரல் 16ஆம் தேதியான நேற்று திருமணம் நடந்து முடிந்தது. தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் அவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். இவரை திருமணம் செய்து கொண்டவர், வெள்ளை முடியுடன் பார்க்க கம்பீரமான மற்றும் ஸ்டைலான ஆள் போல இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். இவர் உண்மையில் யார் தெரியுமா?

4 /7

இவரது பெயர், வசி சச்சி. இவர் தொழில் ரீதியாக ஹை-க்ளாஸ் டிஜே-வாக இருக்கிறார். உள்ளூர் திருமணங்கள் முதல், வெளிநாடுகளில் நடக்கும் திருமணங்கள் வரை அனைத்து திருமண நிகழ்விலும் டிஜேவாக இருந்திருக்கிறார். பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், பிரியங்கா எப்படி ஒரு நட்சத்திர தொகுப்பாளராக இருக்கிறாரோ, அதே போல வசியும் டிஜே குழுக்களில் ஒரு ஸ்டாராக விளங்குவதாக கூறப்படுகிறது. 

5 /7

வசி சச்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் பிரியங்காவுடன் ஆடும் ஒரு வீடியோ இருக்கிறது. அந்த வீடியோ, 2022ல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், “இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறீர்களா?” என்று கேள்வியெழுப்பி வருகின்றனர்.

6 /7

வசி சச்சி, டிஜே மட்டுமல்ல, event management தொழில் செய்பவர் என்றும் கூறப்படுகிறது. திருமண நிகழ்வுகள் மட்டுமல்லாது, பெரிய டிஸ்கோ கிளப்களிலும் இவர் டிஜே-வாக இருக்கிறாராம். 

7 /7

பிரியங்கா-வசியின் திருமணம் செய்து கொண்டதை ஒட்டி, பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.