Kalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்
Kalaignar Magalir Urimai Thogai : துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த சூப்பர் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், யார் யாருக்கெல்லாம் கட்டாயம் ரூ.1000 கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்.
1/10தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ் ஒன்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.
2/10இத்திட்டத்தில் இணைய புதிதாக விண்ணப்பித்த பெண்களில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
3/10துணை முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்த பெண்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4/10இப்போது வரை சுமார் 28 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்துள்ளனர். இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
5/10ஆனால், அவற்றில் தகுதியான பெண்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதையும் துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
6/10அந்தவகையில் பார்க்கும்போது விண்ணப்பித்த 28 லட்சம் பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விதிமுறைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே ரூ.1000 கொடுக்கப்படும்.
7/10ஆண்டு வருமானம் முதல் நில உச்ச வரம்பு வரை எல்லா விதிமுறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். சொந்த பயன்பாட்டுக்காக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களாக இருப்பின் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.
8/10காலமுறை ஓய்வூதியம் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் கீழாக பெறுபவர்களாக இருந்து அவர்களின் குடும்பத்தில் தகுதியான பெண்கள் இருப்பின் அவர்கள் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தால் நிச்சயம் அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
9/10புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், கடந்த முறை விடுபட்டவர்கள் உள்ளிட்டோர் தகுதிகள் சரியாக இருப்பின் கட்டாயம் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்.
10/10எனவே, அரசு ஊழியர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு போனஸ் அறிவித்து குஷிப்படுத்திய தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமைத்தொகை எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு தீபாவளிக்கு முன்பு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை கொடுத்து அவர்களை குஷிப்படுத்தியுள்ளது.