ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்தது ஏன்? உண்மை இதுதான்!

Written ByR Balaji
Published: Sep 02, 2025, 08:47 PM IST|Updated: Sep 02, 2025, 08:47 PM IST

Why Harbhajan Singh Slapped Sreesanth: 2008 ஐபிஎல் தொடரின்போது, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை  ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Why Harbhajan Singh Slapped Srikkanth: இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சுமார் 17 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் வெளியாகி மீண்டும் பேசும்பொருளானது. ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அடித்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

ஐபிஎல்லின் முதல் சீசன்1/8

ஐபிஎல்லின் முதல் சீசன்

2008 ஆம் ஆண்டு, மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்த பிறகு, போட்டிக்குப் பிறகு கைகுலுக்கும்போது ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

ஹர்பஜன் சிங்கை தூண்டியது எது? 2/8

ஹர்பஜன் சிங்கை தூண்டியது எது?

மும்பை அணியின் மோசமான தொடக்கத்தால் ஹர்பஜன் விரக்தியடைந்ததாகவும், ஸ்ரீசாந்தின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் கோபமடைந்ததாகவும், அதுவே இப்படியான ஒரு செயலுக்கு காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

17 ஆண்டுகளுக்கு பின் வெளியான வீடியோ 3/8

17 ஆண்டுகளுக்கு பின் வெளியான வீடியோ

17 வருடங்களாக ஸ்ரீசாந்தின் கண்ணீர் மல்கிய முகம் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி சமீபத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த வீடியோவில் ஹர்பஜன் ஸ்ரீசாந்தை அறைவதற்கு முன்பு அவரை அழைத்த காட்சி இடம்பெற்றிருந்தது. 

ஹர்பஜன் சிங்க்கு கடுமையான தண்டனை 4/8

ஹர்பஜன் சிங்க்கு கடுமையான தண்டனை

இந்த சம்பவம் அறங்கேறிய போது, பிசிசிஐ ஹர்பஜனுக்கு 11 ஐபிஎல் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்தது. மீண்டும் மீண்டும் தவறு செய்தால் வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என்று எச்சரித்தது, இது ஐபிஎல் வரலாற்றில் மிகக் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகும். 

ஐபிஎல்லின் பிம்பத்தைப் பாதுகாக்க புதைக்கப்பட்ட சர்ச்சை 5/8

ஐபிஎல்லின் பிம்பத்தைப் பாதுகாக்க புதைக்கப்பட்ட சர்ச்சை

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆண்டில் அதன் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக இந்தக் காட்சிகள் மறைத்து வைக்கப்பட்டதாக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்தார். 

ஹர்பஜனுக்கும் மங்கிகேட்டுக்கும் உள்ள தொடர்பு6/8

ஹர்பஜனுக்கும் மங்கிகேட்டுக்கும் உள்ள தொடர்பு

ஆண்ட்ரூ சைமண்ட்ஸுடன் மங்கிகேட் ஊழலில் ஹர்பஜன் சிக்கிய அதே ஆண்டில் இந்த சம்வபம் நடந்தது. இது மேலும் ஹர்பஜன் சிங்கின் நற்பெயருக்கு பங்கம் விளைவித்தது. 

ஹர்பஜன் சிங் வருத்தம் 7/8

ஹர்பஜன் சிங் வருத்தம்

ஹர்பஜன் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார், இது அவரது வாழ்க்கையின் "மிகப்பெரிய தவறு" என்று கூறியுள்ளார். தனது கிரிக்கெட் பயணத்திலிருந்து அழிக்க விரும்பும் ஒரே சம்பவம் அதுதான் என அவர் கூறி இருக்கிறார். 

ஸ்ரீசாந்தின் குடும்பம் இன்னும் காயங்களை சுமந்து கொண்டிருக்கிறது8/8

ஸ்ரீசாந்தின் குடும்பம் இன்னும் காயங்களை சுமந்து கொண்டிருக்கிறது

ஸ்ரீசாந்தின் மகள் ஒரு முறை தன்னிடம் பேச மறுத்து, "நீ என் தந்தையை அடித்தாய்" என்று கூறியதாக ஹர்பஜன் வெளிப்படுத்தினார். இதனால் அவர் மனம் உடைந்து போனதாகவும், அந்த சம்பவம் வீரர்களைத் தாண்டி குடும்பங்களை எவ்வளவு காயப்படுத்தியது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் கூறினார்.