அரசை மதிக்காத பாகிஸ்தான் ராணுவம்? ஷெபாஸ் ஷெரீப் ட்வீட் போட்ட 10 நிமிடங்களில் தாக்குதல்!

India Pakistan Ceasefire Violation: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ராணுவம் மீறியதன் பின்னணியை இங்கு காணலாம்.

1 /8

India Pakistan Ceasefire: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணிமுதல் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இரு நாடுகளும் உறுதிப்படுத்தின. அமெரிக்காவின் தலையிட்டில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.  

2 /8

India Pakistan War: இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தினாலும், அதில் அமெரிக்கா குறித்து குறிப்பிடாமல் இருந்தன. பாகிஸ்தான் தரப்பில் அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் பதிவிட்ட X பதிவில் அமெரிக்காவின் தலையீடு குறித்து ஏதும் கூறப்படவில்லை. இந்திய வெளியுறவுத்துறையும் ஏதும் குறிப்பிடவில்லை.  

3 /8

Pakistan Prime Minister Shehbaz Sharif: இந்தச் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்திருந்தது கவனம் பெற்றது. அதில் அவர், இரு நாட்டுக்கும் அமைதியை நிலைநாட்ட அதிபர் டிரம்பின் தலைமைத்துவத்திற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம் என அவர் குறிப்பிட்டிரு்தார்.   

4 /8

Jammu Kashmir Omar Abdulla: ஷெபாஸ் ஷெரீப்ஸ் இந்த ட்வீட்டை இன்றிரவு 8.39 மணிக்கு பதிவிட்டிருந்தார். அதேநேரத்தில், இரவு 8.50 மணிக்கு ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைத் தாண்டி தாக்குதல் தொடுத்ததாக தகவல்கள் வெளிவர தொடங்கின. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா 8.53 மணிக்கு ஜம்முவில் நடக்கும் தாக்குதலை பதிவிட்டிருந்தார்.   

5 /8

Pakistan Army: அதாவது, பாகிஸ்தான் பிரதமர் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு உதவிய டிரம்பை பாராட்டி பதிவு போட்ட 10 நிமிடத்தில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதன்மூலம், பாகிஸ்தான் அரசை மதிக்காமல் ராணுவ தளபதி அசிம் முனீர் தலைமையிலான அந்நாட்டு ராணுவம் தன்னிச்சையாக செயல்பட்டது உறுதியாகிறது.  

6 /8

India Pakistan Ceasefire Violation: பாகிஸ்தான் ராணுவத்தில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இருப்பதும் தற்போது இதன்மூலம் உறுதியாகிறது. பாகிஸ்தான் ராணுவத்தை அந்நாட்டு அரசு எப்படி தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.   

7 /8

Indian Army: தற்போது எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தாக்குதல் ஏதும் இல்லை என இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது.    

8 /8

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானின் சில நகரங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் செய்யப்பட்டாலும் தாக்குதல் தொடர்வதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.