ரூ.1000 பொங்கல் பண்டிகைக்கு யாருக்குமே கிடைக்காது - ஏன் தெரியுமா?
தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கடன் வாங்கும் நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு போதுமான நிதிப்பகிர்வை அளிக்காதது தமிழ்நாடு அரசின் இந்த நிதி நெருக்கடிக்கு மிக முக்கிய காரணமாகும்.
அதனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் (Pongal Gift) ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த சூழலில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருக்கும் கருத்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க அரசிடம் பணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு கஜானாவில் பணம் இல்லாததால் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முதலமைச்சர் அதற்காக பணத்தை ரெடி செய்து கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நடந்த கூட்டத்தில் இந்த கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.
மேடையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசும்போது, " அரசு கஜானாவில் பணம் இல்லை. அதனால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பணத்தை ரெடி செய்து கொண்டிருக்கிறார். சீக்கிரமே எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தா.மோ. அன்பரசனின் இந்த கருத்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் பொருந்துமே என மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே கலைஞர் உரிமைத் தொகை என்பது தகுதியான பெண்களுக்கு சென்று சேரவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படவில்லை என்றால் கூடுதல் அதிருப்தியை தமிழ்நாடு அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான நிதி திரட்டலில் அனைத்து துறைகளும் ஈடுபட்டுள்ளன. போதுமான தொகை அரசு கஜானாவுக்கு வந்தவுடன் உடனடியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். இப்போதைய சூழலில் தமிழ்நாடு கடும் அரசு நிதி நெருக்கடியிலேயே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் சமூக நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த முடியாத சூழல் கூட உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது.