கலைஞர் உரிமைத் தொகை வாங்கினால் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்குமா?
தமிழ்நாடு அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கொடுத்து வருகிறது. கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்ற பெயரில் வழங்கப்படும் இந்ந உதவித் தொகையை நேரடியாக 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அண்மையில், இந்த திட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காரணம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியற்ற நபர்களாக இருப்பதை அரசு கண்டுபிடித்தது தான். இதுதவிர, இறந்தவர்கள் பெயரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது.
விரைவில் இந்த திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் தகுதிகள் அனைத்தும் உண்மையா? என தமிழ்நாடு அரசு மறுபரிசீலனையும் செய்து கொண்டிருக்கிறது.
தகுதி வாய்ந்த பல லட்சக்கணக்கான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த திட்டத்தில் நிதியுதவி கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்றால் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு (Pongal Gift) கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கிறது. உண்மையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம். அத்துடன் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பாக கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
அரிசி, சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு, விதவை மற்றும் திருநங்கை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் இந்த பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் மட்டும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.
ஆண்டு வருமானம் 2.50 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும், கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது, 3600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு வரையறைகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. இந்த விதிமுறைகளுக்குட்பட்டு வருவபவர்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.
ஒருவேளை தகுதியற்றவர்கள் யாரேனும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்றால் அவர்கள் குறித்து ஆன்லைனில் அதாரத்துடன் புகார் அளிக்கவும் செய்யலாம். அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியற்ற பயனாளிகளின் பெயரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இருந்து நீக்குவார்கள்.