தீராத முழங்கால் பிரச்சனை.. 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா?

Written ByR Balaji
Published: Aug 11, 2025, 01:52 PM IST|Updated: Aug 11, 2025, 01:54 PM IST

MS Dhoni: 44 வயதான தோனி, வரும் ஐபிஎல் தொடர்களில் விளையாடுவாரா என ரசிகர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

1/6

நடந்து முடிந்த 2025 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி இப்படி படுமோசமாக விளையாடியது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

2/6

இதன் காரணமாக வரும் 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாட பல திட்டங்களை தீட்டி வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்து வருகிறது. அதாவது எம். எஸ். தோனி வரும் ஐபிஎல் தொடர்களில் விளையாடுவாரா என்பதுதான். 

3/6

நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரிலேயே எம்.எஸ்.தோனி கடைசி கட்டத்தில்தான் பேட்டிங் செய்து வந்தார். அவரால் அதிக ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாத நிலையில் இருந்தது. இதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்டிருக்கும் முழங்கால் வலிதான் காரணம். 

4/6

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற பிறகு, தோனி மும்பையில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். அதன்பிறகு அவரால் முன்பை போல் செயல்படமுடியவில்லை. இதனாலேயே அவர் கடந்த இரண்டு சீசன்களாக பேட்டிங்கின் கீழ் மட்டத்தில் விளையாடி வருகிறார். 

5/6

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஓய்வு குறித்து பேசிய அவர், "நான் விளையாடுவேனா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. முடிவு செய்ய எனக்கு நேரம் இருக்கிறது. அடுத்த 5 வருடம் விளையாடும் அளவிற்கு கண் நன்றாக உள்ளது. ஆனால் கண்ணை வைத்து மட்டும் விளையாட முடியாது அல்லவா என கிண்டலாக பேசினார். 

6/6

மற்றொரு நிக்ழ்ச்சியில், "சிஎஸ்கே அணியில் நான் 15 முதல் 20 வருடங்கள் வரை பயணிப்பேன். அதற்காக 15, 20 வருடங்கள் நான் விளையாடுவேன் என ரசிகர்கள் நினைக்க வேண்டாம்" என கூறினார்.