இந்தியா - பாகிஸ்தான் போரால் 2025 ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழும்பி உள்ளது.
பகல்காமில் ஏப்ரம் 22ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கிடையில் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மூ காஷ்மீரின் பகல்காம் பகுதியில் திடீரென பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது இருநாடுகளுக்கும் இடையேயான உறவை முற்றிலுமாக நிறுத்த வழிவகுத்தது.
இச்சூழலில் இந்தியா பாகிஸ்தானுக்கு பதலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. பாகிஸ்தானும் இந்தியாவில் 15 நகரங்களை குறிவைத்து தாக்க முயன்றது. இதனால் ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுமோ என்ற கேள்வி எழும்பி உள்ளது.
ஏற்பகனவே மே 11ஆம் தேதி தர்மசாவில் நடைபெற இருந்த மும்பை - பஞ்சாப் இடையிலான போட்டி அகமதாபாத் மைதானத்திற்கு மாற்றி பிசிசிஐ உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று (மே 08) தர்மசாலாவில் பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வந்தது. ஆனால், ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றதால், திடீரென போட்டியை பாதியில் ரத்து செய்துவிட்டனர். இதனால் ஐபிஎல் தொடர் நின்றுவிடும் என்ற கேள்வி மேலும் எழும்பி உள்ளது.
உலகம் முழுக்க நடக்கும் பிரீமியர் லீக்கில் ஐபிஎல் பிரீமியர் லீக் தான் அதிக வரவேற்பு உள்ளது. ரசிகர்கள் இந்த ஐபிஎல் பிரீமியர் லீக்கிற்குதான் ஆதித ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்தால், ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது.