World Class ! கொல்கத்தா மெட்ரோவில் பயணம் செய்யலாம் வாருங்கள்..!!!

கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மெட்ரோ நிலையங்களின் வளாகத்தில் நவீன வசதிகளை வழங்குவதோடு, சுவர் ஓவியங்கள் மூலம் அவை அழகாக அலங்கரிக்கப்படுகின்றன. நிலையங்களின் அழகைக் காட்டும் கொல்கத்தா மெட்ரோவின் சில படங்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. 

1 /5

சமீபத்தில்,கிழக்கு-மேற்கு மெட்ரோ வழிதடத்தில் உள்ள புல்பகன் மெட்ரோ நிலையத்தை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார்.

2 /5

செக்டார் 5  மற்றும் ஹவுரா மைதானத்தை இணைக்கும் வழித்தடம் டிசம்பர் 2021 க்குள் நிறைவடையும். 16.55 கி.மீ நீளமுள்ள கிழக்கு மேற்கு காரிடார் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 /5

புல்பகன் மெட்ரோ நிலையம் தொடங்கப்பட்டவுடன், கிழக்கு-மேற்கு மெட்ரோ காரிடாரில் உள்ள நிலையங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சேவையைத் தொடங்குவதன் மூலம், செக்டார் -5 இலிருந்து புல்பகனை அடைய வெறும் 16 நிமிடங்கள் தான் ஆகும். புல்பகன் மெட்ரோ நிலையம் மிகவும் நவீனமானது. கிழக்கு-மேற்கு காரிடார் சுமார் 16 கி.மீ நீளம் கொண்டது என்று கொல்கத்தா மெட்ரோ செய்தித் தொடர்பாளர் பானர்ஜி தெரிவித்தார். இந்த காரிடாரில் உள்ள முதல் நிலத்தடி மெட்ரோ நிலையம் இதுவாகும்.

4 /5

கொரோனா தொற்றுநோய் காரணமாக நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்னர், கொல்கத்தா மெட்ரோ சேவையின் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.  

5 /5

முதல் ரயில் டம் டம் முதல் கவி சுபாஷ் நிலையம் வரை இயக்கப்பட்டது. கொல்கத்தா மெட்ரோ தனது சிறப்பு ரயில்களில் சிலவற்றை செப்டம்பர் 14 அன்று இயக்கியது. இந்த ரயில்கள் நீட் தேர்வு மாணவர்களுக்காக இயக்கப்பட்டன.