No-Tobacco Day Indian States That Has High Smoking Rate : மார்ச் 12ஆம் தேதியான இன்று, உலக புகைப்பிடிப்பு தடை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, எந்தெந்த இந்திய மாநிலங்களில் புகைப்பிடிப்பவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பதை பார்ப்போமா?
No-Tobacco Day Indian States That Has High Smoking Rate : புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மார்ச் 12ஆம் தேதியான இன்று உலக புகைப்பிடிப்பு நிறுத்தும் தினம் கொண்டாடப்படுகிறது. பல இடங்களில் புகைப்பிடிப்பது ‘உடல் நலத்திற்கு கேடு’ என்ற வாசகத்தை பார்த்திருப்போம், படித்திருப்போம். இருப்ப்பினும் புகைப்பிடிப்பவர்கள் திருந்தியபாடில்லை. இதையடுத்து, இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் அதிகம் புகைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்ப்போமா?
1/7சிக்கிம் மாநிலத்தில் இருப்பவர்களில், 39.1% பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்களாக இருக்கிறார்களாம்.
2/7நாகாலாந்தில் இருக்கும் 44.9% ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இந்த சமூகத்தில் புகைப்பிடிப்பது என்பது ஒரு சகஜமான விஷயமாக நடக்குமாம்.
3/7மேகாலயாவில் இருக்கும் 48% மேலான ஆண்கள், புகைப்பிடிக்கின்றனர். குறிப்பாக பீடி மற்றும் கைகளால் சுருட்டப்பட்ட புகை வஸ்துக்கள் இங்கு பிரபலம் என கூறப்படுகிறது.
4/7மணிப்பூரில் இருக்கும் 50.1% பேர் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். இது, இங்கிருக்கும் கலாச்சாரத்தில் ஒரு பங்காகவே பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
5/7அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் 53.6% ஆண்கள் புகைப்பிடிக்கின்றனராம். இங்கிருக்கும் மலைவாழ் மக்கள் பலர் இந்த புகைப்பழக்கத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்களாம்.
6/7திருபுராவில் இருக்கும் 60.3% ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். குறிப்பாக 30-60 வயதில் இருப்பவரள்தான் இந்த பழக்கத்திற்கு அதிகம் அடிமையானவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.
7/7இந்தியாவில் இருப்பதிலேயே அதிகம் புகைப்பிடிப்பவர்கள் மிசோரம் மாநிலத்தில் இருப்பதாக ஒரு தரவு கூறுகிறது. இங்கிருக்கும் 72.5% பேர் புகைப்பிடிக்கின்றனர்.