உலக பணக்கார பிரபலங்கள்..நம்பர் 1 இடத்தில் இந்திய நடிகர்! யார் தெரியுமா?

Written ByYuvashree
Published: Oct 02, 2025, 11:48 AM IST|Updated: Oct 02, 2025, 11:48 AM IST

World's Richest Indian Celebrity Actor : உலகளவில் பணக்கார பிரபலங்களுள் ஒருவராக மாறியிருக்கிறார் இந்திய நடிகர் ஒருவர். அதிலும், அந்த லிஸ்டில் டாப் இடத்தில் இவர்தான் இருக்கிறார்.

World's Richest Indian Celebrity Actor : சமீபத்தில் உலக பணக்கார நடிகர்களின் லிஸ்ட் வெளியானது. இதில் இடம்பெற்றிருப்பதில் ஒருவரை தவிர பிறர் அனைவரும் ஹாலிவுட் பிரபலங்கள்தான். லிஸ்டில் ஒரே ஒரு இந்திய நடிகர் மட்டும் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? இதோ முழு விவரம்!

Kim Kardashian 1/7

கிம் கார்டாஷியன்

உலக ஹாலிவுட் பிரபலங்களின் பட்டியலில், 7வது இடத்தில் இருக்கிறார் கிம் கார்டாஷியன். டிவி ஷோ மூலம் பிரபலமான இவர், மாடலும் கூட. இவரது சொத்து மதிப்பு, சுமார் அமெரிக்க டாலர் மதிப்பின் படி1 பில்லியன் என்று கூறப்படுகிறது. 

Dwayne Johnson 2/7

டுவைன் ஜான்சன்

‘The Rock' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர், டுவைன் ஜான்சன். இவர், உலக பணக்காரர்களின் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பும் அமெரிக்க டாலர் மதிப்பின்படி 1 பில்லியனுக்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Tyler Perry3/7

டெய்லர் பெர்ரி

பிரபல ஹாலிவுட் நடிகர் டெய்லர் பெர்ரி, உலக பணக்காரர்களின் லிஸ்டில் 5வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் கணக்கின் படி 1.1 பில்லியன் என்று கூறப்படுகிறது. 

Jerry Seinfeld4/7

ஜெர்ரி சீன்ஃபீல்ட்

அமெரிக்காவின் பிரபலமான ஹாலிவுட் நடிகர்களுள் ஒருவர், ஜெர்ரி சீன்ஃபீல்ட். இவரது சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இவர், உலக பணக்காரர்களின் லிஸ்டில் 4வது இடத்தில் இருக்கிறார். 

Arnold Schwarzenegger5/7

அர்னால்டு

அர்னால்டை தெரியாமல் யாராவது இருக்க முடியுமா? இவரது சொத்து மதிப்பு, அமெரிக்க டாலர்களின் மதிப்பு படி, 1.2 பில்லியனாக இருக்கிறது. இவர், உலக பணக்காரர்களின் லிஸ்டில் 3வது இடத்தில் இருக்கிறது. 

Taylor Swift6/7

டெய்லர் ஸ்விஃப்ட்

பிரபல அமெரிக்க பாப் பாடகியாக இருக்கிறார், டெயிலர் ஸ்விஃப்ட். இவர், இந்தியாவிலும் ரொம்ப பிரபலமானவர். இவரது சொத்து மதிப்பு சுமார் 1.3 பில்லியனாக இருக்கிறது. உலக பணக்கார பிரபலங்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். 

Shah Rukh Khan7/7

ஷாருக்கான்

உலக பணக்கார நடிகர்களின் லிஸ்டில் டாப் இடத்தில் இருப்பவர், பாலிவுட் நடிகர் ஷாருக்கான்தான். இந்திய நடிகரான இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.12,490 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இவர் 1.4 பில்லியன் வரை சொத்து வைத்துள்ளாராம். இப்போது, இவர் குறித்த செய்திகள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.