நீரிழிவு நோய் என்பது கொடூரமான நோயாகும். இந்த நோய் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படுகிறது. இரத்த சர்க்கரையை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படம்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நீரிழிவு, கொலஸ்ட்ரால், பிபி ஆகியவற்றை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். சில பிராணாயாம பயிற்சிகள் நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை (Health Tips) மேம்படுத்தும்.
தனுராசனம்: தனுராசனம் செய்வதன் மூலம், வயிற்றுக்குள் உள்ள உறுப்புகள் சரியான முறையில் செயல்படத் தொடங்கும். இதன் காரணமாக கணையம் சரியான முறையில் செயல்படத் தொடங்கும். தினமும் தனுராசனம் செய்வது உடலில் இன்சுலின் ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்தும்.
பாலாசனம்: உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க, பாலாசனம் செய்யலாம். இந்த ஆசனத்தைச் செய்வதன் மூலம், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
மண்டுகாசனம்: நீரிழிவு நோயாளிகள் மண்டுகாசனம் செய்வதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறலாம். இதனால் கணையம் சுறுசுறுப்பாகி, இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தும். இதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
பச்சிமோத்தாசனம்: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பச்சிமோத்தாசனம் செய்லாம். இவை இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும். இது தவிர, இந்த ஆசனம் செய்வதால் முதுகெலும்பு பலப்படுத்தப்படும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை