Yoga Vs Walking For Diabetics: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். அதற்காக தினமும் சில உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை முறையாக செய்ய வேண்டும்.
Yoga Vs Walking For Diabetics: உடற்பயிற்சி மற்றும் யோகா இரண்டும் உடல்நலத்தை மேம்படுத்துவதிலேயே சிறப்பு பலன் தரும். ஆனால் நீரிழிவு நோயாளிகள், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, இருதய ஆரோக்கியம் மற்றும் மனநலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவு மற்றும் உடற்பயிற்சி(Diabetes and exercise): நீரிழிவை கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிக முக்கியமான ஒன்று. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
நடைப்பயிற்சி நன்மைகள்(Benefits of walking): காலை நடைப்பயிற்சி, உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதயம், தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கிறது.
யோகாவின் பங்களிப்பு(The contribution of yoga): யோகா, மன அழுத்தத்தை குறைத்து ஹார்மோன்களின் சம நிலையை பாதுகாக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் அவசியமானது.
மன நலமே உடல் நலம்(Mental health is physical health): தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி மூலம் மனம் அமைதியடைகிறது. மன அழுத்தம் நீரிழிவைத் தூண்ட்டும் முக்கிய காரணங்களில் ஒன்று என்பதால், யோகா வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்.
நடைப்பயிற்சியின் எளிமை(The ease of walking): வீட்டை விட்டு வெளியே சென்று எளிதாக செய்யக்கூடிய நடைப்பயிற்சி அனைவருக்கும் ஏற்றது. அதில் எந்தவொரு சிரமமான செயல்பாடுகள் தேவைப்படுவதில்லை.
யோகாவின் ஆழ்ந்த தாக்கம்(The profound impact of yoga): சில யோகாசனங்கள் உடற்கூறு கட்டமைப்பை ஆழமாக இயக்கச் செய்கின்றன. இவை உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டு இயக்கங்களை மேம்படுத்தும்.
இரண்டும் செய்தால் நல்ல பலன்(Doing both will yield good results): நடைப்பயிற்சி மற்றும் யோகா இரண்டும் செய்வது உடல் மற்றும் மன நலத்தில் முழுமையான முன்னேற்றம் பெறலாம். நீரிழிவை சமப்படுத்துவதில் இது சிறந்த வழியாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.