Zero Cibil Score: உங்களுக்கு சிபில் ஸ்கோர், மைனஸ் 1 (-1) ஆக இருந்தால் வங்கிகள் கடன் வழங்க தயங்குவார்கள். வங்கி கடன் தருவதற்கு இந்த வழியை நீங்கள் பின்பற்றி கடன் பெறலாம், சிபில் ஸ்கோரையும் உயர்த்தலாம்.
Bank Loan: சிபில் நன்றாக இருந்தாலே கடன் வழங்குவார்கள். சிபில் ஸ்கோர் -1 ஆக இருந்தால் கடன் வழங்க மாட்டார்கள், கிரெடிட் கார்டு வழங்கமாட்டார்கள். அப்படியென்றால் எப்படி கடன் பெற்று சிபில் ஸ்கோரை உயர்த்துவது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.
வங்கியில் வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களை வாங்குவதற்கு உங்களது சிபில் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும் உங்களது சிபில் ஸ்கோரை உங்களுக்கு கடன் வழங்கப்படும்.
ஒரு சிலர் இதுவரை கடனே வாங்கியிருக்க மாட்டார்கள், கிரெடிட் கார்டும் வாங்கியிருக்க மாட்டார்கள். அதாவது அவர்களுக்கு கடன் வரலாறே இருக்காது. இவர்களுக்கு சிபில் ஸ்கோர் -1 ஆக இருக்கும். அதாவது இதனை ஜீரோ கிரேடிட் ஸ்கோர் என்றழைப்பார்கள்.
உங்களது சிபில் ஸ்கோர் -1 ஆக இருந்து, நீங்கள் வங்கியில் கடன் வாங்க விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு கடன் கொடுக்க அவர்கள் தயங்குவார்கள். காரணம், நீங்கள் இதை சரியான நேரத்திற்கு திருப்பிச் செலுத்துவீர்களா அல்லது ஏமாற்றிவிடுவீர்களா என்றே சந்தேகம் அவர்களுக்கு இருக்கும். ஏனென்றால் உங்களுக்கு இதற்கு முன் கடன் பெற்ற வரலாறே இல்லை என்பதால்...
இருப்பினும் உங்களது வருமானம் மற்றும் பிற சொத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் கடன் வழங்குவார்கள். மருத்துவர்கள், பட்டய கணக்காளர் உள்ளிட்ட பணியில் இருப்பவர்களுக்கு வங்கிகள் தயக்கம் ஏதுமின்றி கடன் கொடுத்துவிடும்.
ஆனால், சிலருக்கு சிபில் ஸ்கோர் அதிகம் இருந்தால்தான் கடன் வழங்கப்படும் என வங்கிகள் சொல்லலாம். வங்கி கடன் வழங்காமல் எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது என்றும் சிலர் குழப்பமடைகின்றனர். அந்த வகையில் நீங்கள் நிலையான வைப்புத்தொகை திட்டத்தை வைத்திருப்பவர் என்றால் அது உங்களுக்கு பயனளிக்கும்.
ஆம், உங்களின் நிலையான வைப்புத்தொகை கணக்கிற்கு எதிராக நீங்கள் வங்கியில் கடன் வாங்கலாம். இந்த கடனை வாங்குவதற்கு சிபில் ஸ்கோரை பார்க்க மாட்டார்கள். FD கணக்கிற்கு எதிராக வாங்கிய கடனை நீங்கள் முறையாக செலுத்தினால் சிபில் ஜீரோவில் இருந்து சிறப்பான நிலையை எட்டிவிடும்.
உங்களது FD திட்டத்தை பொறுத்து நீங்கள் வாங்கும் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் மாறுபடும். நீங்கள் இந்த FD திட்டத்திற்கு எதிராக பெற்ற கடனை முழுவதுமாக, அந்த திட்டம் முதிர்ச்சி பெறுவதற்குள் திருப்பிசெலுத்த வேண்டும். FD திட்டத்தில் வரும் வட்டியை விட, கடனுக்கான வட்டி 2% கூடுதலாக இருக்கும். ஆனால், Processing Fee போன்ற தொல்லைகள் இந்த கடனில் இருக்காது.
சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான கணக்கீட்டை கொண்டது. இதில் நீங்கள் எவ்வளவு அதிகமாக ஸ்கோரை வைத்திருக்கிறீர்களோ அதுவே சிறந்த ஸ்கோர் ஆகும். நீங்கள் சிபில் ஸ்கோரை அதிகமாக வைத்திருந்தால் எளிதாகவும் கடன் கிடைக்கும், வட்டி குறையும் வாய்ப்பும் உள்ளது. 750 அல்லது அதற்கும் மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்க தயங்காது.