கொட்டும் முடியை ஒரு வாரத்தில் நிறுத்தலாம்: தினமும் 5 நிமிடம் இதை செய்தால் ரிசல்ட் கிடைக்கும்!

How To Stop Hair Fall : தலைமுடி பராமரிப்பில் கவனம் செலுத்தாததும் முக்கிய காரணமாக உள்ளது. வாருங்கள், முடி கொட்டுவதை எவ்வாறு நிறுத்தலாம் என்பதை எளிமையாகப் பார்ப்போம்.

Healthy Hair Care: தலைமுடி கொட்டுவது இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. சரியான உணவுப் பழக்கம் இல்லாததும், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணிகளால் இந்த நிலை ஏற்படுகிறது. 

1 /8

தலைமுடியின் முக்கியத்துவம்(The importance of hair): தலைமுடியின் ஆரோக்கியம் ஒருவரின் உடல் நிலையை பிரதிபலிக்கிறது. நம் முன்னோர்கள் தலைமுடியைப் பார்த்தே உடல்நிலை பற்றி கூறினர் என்பது சிறந்த எடுத்துக்காட்டு.

2 /8

வாரத்திற்கு மூன்று முறை எண்ணெய் தேவை(Oil is needed three times a week): தலைமுடி வளர்ச்சிக்குத் தேங்காய் எண்ணெய் மிகவும் பயனளிக்கிறது. அதில் சிறிது ஆமணக்கு எண்ணெய் கலந்து வாரத்தில் மூன்று முறை தடவலாம். இது முடி உதிர்வை குறைக்கும்.

3 /8

சரியான ஷாம்பு தேர்வு(Choosing the right shampoo): சல்பேட் மற்றும் பாரபென் இல்லாத இயற்கை ஷாம்புவை பயன்படுத்துங்கள். முடியை சூடான நீரில் கழுவுவதை தவிர்க்கவும்.

4 /8

உணவுமுறை முக்கியம்(Diet is important.): பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர்ந்த பழங்களை உணவில் சேர்ப்பது முடி உதிர்வை தடுக்கும். இதன் மூலம் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

5 /8

5 நிமிடம் மசாஜ்(5 minute massage): தினமும் காலை எழுந்ததும் மற்றும் இரவில் தூங்குவதற்கு முன் உச்சந்தலையில் சற்று நேரம் மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஒரு வாரத்தில் மாற்றத்தை காண முடியும்.  

6 /8

இலவங்கப்பட்டை ஹேர் மாஸ்க்(Cinnamon hair mask): இலவங்கப்பட்டை அடங்கிய ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது கூந்தலுக்கு சத்து சேர்க்கும். தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை எளிதாக காணலாம்.  

7 /8

தூக்கம் மற்றும் மன அழுத்தம்(Sleep and stress): மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை, இவை இரண்டும் உடலுக்கும் முடிக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. மேலே கூறிய அனைத்தும் பயனளிக்க வேண்டுமெனில், இந்த இரண்டும் கட்டாயமாக சீராக இருக்க வேண்டும்.

8 /8

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)