Indian Railways New Rules 2025: ரயில்வேயின் அந்த ஐந்து முக்கிய விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். ரயில்வேயின் புதிய விதிகள் குறித்து கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் ரயில் டிக்கெட் எடுக்கும் போது சிக்கலை சந்திக்க நேரிடும்.
Indian Railway Ticket Price Hike: நீங்களும் இந்திய ரயில்வேயில் அடிக்கக்டி பயணம் செய்பவர்கள் எனில் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஜூலை 1 முதல், ரயில்வேயின் பல முக்கியமான விதிகள் மாறிவிட்டன. தட்கல் டிக்கெட்டுகள் முதல் காத்திருப்புப் பட்டியல் வரை மற்றும் கட்டணம் முதல் முன்பதிவு அட்டவணை நேரம் வரை என ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. இந்தியன் ரயில்வேயின் ஐந்து புதிய விதிகள் குறித்து முழு விவரங்களை கட்டாயமாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
தற்போது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்டுகள் கிடைக்கும். முன்பதிவு தொடங்கிய முதல் 10 நிமிடங்களில், ஆதார் இணைக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்வே முகவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளது. அதாவது, முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு தான் முகவர்கள் தட்கல் டிக்கெட்டுகளை பெற முடியும். எனவே சாதாரண பயணிகள் முன்பதிவு செய்வதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. ரயில்வே முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத தரகர்கள் ஒரு சிறப்பு வகையான மென்பொருளைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளையும் கைப்பற்றுவதாக ஆயிரக்கணக்கான பயணிகளிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் உங்கள் சுயவிவரத்தை ஆதாருடன் இணைக்கவும், இதனால் நீங்கள் எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
OTP உள்ளிடப்படாவிட்டால், உங்களுக்கு டிக்கெட் கிடைக்காது. பாதுகாப்பு மற்றும் போலி முன்பதிவைத் தடுக்க, ரயில்வே மற்றொரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே வரும் ஜூலை 15 முதல் டிக்கெட் முன்பதிவுக்கு OTP கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இனிமேல், நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போதெல்லாம், ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதாவது, OTP உள்ளிடப்படாவிட்டால், டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்படும்.
இந்தியன் ரயில்வே ஜூலை 1 முதல் ரயில்வே கட்டணத்தை உயர்த்தி விட்டது. நீங்கள் AC அல்லாத வகுப்பு கட்டணத்தில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசாவும், AC வகுப்பு கட்டணத்தில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசாவும் அதிகமாக செலுத்த வேண்டும். அதாவது, நீங்கள் 1000 கி.மீ பயணம் செய்தால், முன்பு இருந்ததை விட, ஏசி கட்டணத்தில் ₹20 அதிகமாகவும், ஏசி அல்லாத கட்டணத்தில் ₹10 அதிகமாகவும் செலுத்த வேண்டியிருக்கும். இந்த டிக்கெட் கட்டண அதிகரிப்பால், ஒரு வருடத்தில் சுமார் ₹900 கோடி லாபத்தை ஈட்டும் என்று ரயில்வே நம்புகிறது. இது ரயில்வேயின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும்.
தற்போது எந்த வகுப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்களில் மொத்த டிக்கெட்டுகளின் எண்ணிக்கையில் 25% மட்டுமே வழங்க முடியும். அதாவது, ஒரு பெட்டியில் 100 இருக்கைகள் இருந்தால், காத்திருப்பு பட்டியலில் 25 டிக்கெட்டுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்படும். இதை விட அதிக டிக்கெட்டுகளை வழங்க முடியாது. இருப்பினும், இதில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
முன்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தால், டிக்கெட் கன்ஃபார்ம் ஆனதா? இல்லையா? எனத் தெரிந்துக்கொள்வதற்கு ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு தான் அறிவிக்கப்படும். ஆனால் தற்போது அது மாற்றப்பட்டு உள்ளது. புதிய விதியின் மூலம், பயணிகள் தங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா? இல்லையா? என்பதை 8 மணி நேரத்திற்கு முன்பே அறிந்து கொள்வார்கள். இதன் காரணமாக, பயணிகள் இரண்டாவது விருப்பத்தைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கும்.
ரயில்வேயில் பயணம் செய்ய நினைத்தால், ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள், குறிப்பாக ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது செயலி மூலம் டிக்கெட் எடுத்துக்கொள்ளுங்கள்.
எனவே, ஜூலை மாதம் முதல் ரயில்வேயில் நிகழும் ஐந்து முக்கிய மாற்றங்கள் உங்களை நேரடியாகப் பாதிக்கலாம். நீங்கள் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்க விரும்பினால், எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணிக்க இந்த விதிகளைப் பின்பற்றுங்கள்.