இந்தியாவில் இனி வாய்ப்பு இல்லை! வெளிநாட்டு அணியில் இணைந்த யுஸ்வேந்திர சாஹல்!

இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட யுஸ்வேந்திர சாஹல், தற்போது வெளிநாட்டு அணியில் விளையாட தேர்வாகி உள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு விளையாட உள்ளார்.

1 /6

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. கடைசியாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார்.

2 /6

2024 டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்று இருந்தாலும், பிளேயிங் 11ல் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்ததாக ஐபிஎல் 2025ல் விளையாட உள்ளார் சாஹல்.

3 /6

இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவதால் ஐபிஎல் 2025க்குப் பிறகு, கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் நார்தாம்ப்டன்ஷையருக்காக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

4 /6

இதற்கு முன்பு 2023ல் இதே  அணிக்காக விளையாடியுள்ளார். அப்போது சிறப்பாக விளையாடி 4 போட்டிகளில் 21.10 சராசரியாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

5 /6

கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடுவது குறித்து பேசிய சாஹல், "கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி இருந்தேன். மீண்டும் அதில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பெரிய வெற்றிகளைப் பெற முடியும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.  

6 /6

நார்தாம்ப்டன்ஷையரின் தலைமை பயிற்சியாளர் டேரன் லெஹ்மனும், "இந்த சீசனில் சாஹல் மீண்டும் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது அனுபவம் எங்களுக்கு நிச்சயம் உதவும். அவர் இருப்பது மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.