Cricketers Love After Divorce: முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் தற்போது காதல் செய்து வரும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இங்கே.
Cricketers Love After Divorce: யுஸ்வேந்திர சாஹல், ஷிகர் தவான் உள்ளிட்டோர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துக்கொண்டு தற்போது வேறு ஒரு பெண்ணை காதல் செய்து வருகின்றனர். அப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருவருடன் டேட்டிங் செய்யும் கிரிக்கெட் பிரபலங்கள் யாரெல்லாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
1/5ஷிகர் தவான்: இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் ஆயிஷா முகர்ஜி என்பவரை 2012ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜோராவர் என்ற மகன் பிறந்தான். இருப்பினும், 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில், ஷிகர் தவான் சமீபத்தில் அபுதாபியில் தயாரிப்பு ஆலோசகரான சோஃபி ஷைனை டேட்டிங் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
2/5யுஸ்வேந்திர சாஹல்: இந்திய கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளருமான யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020ஆம் ஆண்டு நடன கலைஞர் தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்துக்கொண்டார். நன்றாக சென்றுக்கொண்டிருந்த இவர்களின் திருமணம் வாழ்க்கையில் திடீரென விரிசல் விழுந்து இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது, 34 வயதான அவர் ஆர்.ஜே. மஹ்வாஷுடன் காணப்பட்டார். இருவரும் தங்கள் உறவை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் டேட்டிங் செய்கிறார்கள் என்ற வதந்திகள் பரவலாக உள்ளன.
3/5ஹர்திக் பாண்டியா, மாடல் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து, 2019 ஆம் ஆண்டு துபாயில் ஒரு படகில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு அவர்களுக்கு மகன் அகஸ்தியா பிறந்தார். 2023 ஆம் ஆண்டில், உதய்பூரில் ஒரு ஆடம்பரமான விழாவுடன் இந்த ஜோடி தங்கள் திருமண உறுதிமொழிகளைப் புதுப்பித்தது. ஆனால் திடீரென இந்த ஜோடி 2024 இல் விவாகரத்தை அறிவித்து. அப்போதிருந்து பாண்டியா பிரிட்டிஷ் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலம் ஜாஸ்மின் வாலியாவுடன் இணைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இருவரும் தங்கள் உறவை உறுதிப்படுத்தவில்லை. இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றன.
4/5ஷோயப் மாலிக்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் அண்டு வரை ஆயிஷா சித்திக் என்பவருடன் வாழ்ந்து வந்தார். பின்னர் அவருடன் விவாகரத்தை பெற்றுக்கொண்டு இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை திருமணம் செய்துக்கொண்டார். சுமார் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் 2023ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர். இந்த நிலையில், ஷோயப் மாலிக் சனா ஜாவேத் என்ற பாகிஸ்தான் நடிகையை கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
5/5தினேஷ் கார்த்திக்: இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கடந்த 2007ஆம் ஆண்டு நிகிதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் நிகிதா தனது சக வீரர் முரளி விஜய்யுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதை உணர்ந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து வாங்கிக்கொண்டு 2015ஆம் ஆண்டு இந்திய ஸ்குவாஷ் நட்சத்திரம் தீபிகா பல்லிகல்லை திருமணம் செய்துக்கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.