இனி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!

Puducherry Budget 2025: புதுச்சேரின் அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Mar 12, 2025, 07:48 PM IST
  • பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500
  • புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு
இனி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநரின் உரையுடன் கூட்டமானது தொடங்கியது. இந்நிலையில், புதுச்சேரி மாநில அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை தாக்கல் செய்தார். 

Add Zee News as a Preferred Source

பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள் 

இந்த பட்ஜெட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்படும். பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் வாரம் 3 நாட்கள் வழங்கப்பட்டு வரும் முட்டை இனிமேல் அனைத்து நாட்களும் வழங்கப்படும். அதேபோல் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளும் ரூ.1000 வழங்கப்படும் என்றார் முதலமைச்சர் ரங்கசாமி. 

மேலும் படிங்க: இந்திய மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: மத்திய அரசின் மெகா ஓய்வூதியத் திட்டம்

பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500

ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2000, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை, மாதம்தோறும் குடும்ப தலைவிகளிக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இனி ரூ.2500 வழங்கப்படும். 

முதியோர் உதவித்தொகை பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் ஈமச்சடங்கு தொகையை ரூ.20,000 உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் மீனவ சமுதாய ஈமச்சடங்குகளுக்கான நிதி ரூ.25,000 உயர்த்தி வழங்கப்படும். மேலும், மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு ர்50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு:ள்ளது. 

வாஜ்பாய் பெயர் சூடப்படும்

புதுச்சேரி ஈசிஆர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும். புதுச்சேரியின் மத்திய சிறைச்சாலை முழுவதுமாக கணினி மயமாக்கப்படும் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   

மேலும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News