)
Puducherry Language War: இந்தியாவின் தென் மாநிலங்களில் எப்போதுமே மொழி சார்ந்த விவாதங்கள் உணர்வுப்பூர்வமானவை மட்டுமல்ல, அவை மக்களின் கலாச்சார அடையாளத்தோடும் நேரடியாகத் தொடர்புடையவை. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மிகத்தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தற்போது எழுந்துள்ள மும்மொழிக் கொள்கை குறித்த விவாதங்கள் அம்மாநில அரசியலிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் (NEP) ஒரு பகுதியாகக் கொண்டுவரப்படும் இந்த மும்மொழிக் கொள்கை, பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தைச் சிதைத்து, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் மறைமுக முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தின் கல்வி மற்றும் கலாச்சாரச் சூழல் என்பது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்கு நீண்டகாலமாகப் பின்பற்றி வரும் மொழி நடைமுறைகளின் பின்னணி என்ன? தெரிந்துக்கொள்ளுங்கள்.
முதன்மை மொழியாகத் தமிழ்: புதுச்சேரியின் பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாகவும், நிர்வாக மற்றும் கல்விப் பயன்பாட்டில் முதன்மை மொழியாகவும் தமிழ் இருந்து வருகிறது.
இணைப்பு மொழியாக ஆங்கிலம்: சர்வதேசத் தொடர்புகளுக்கும், உயர்கல்விக்கும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகத் தடையின்றிப் பயன்படுத்தப்படுகிறது.
பிரெஞ்சு மொழியின் தனித்துவம்: பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள புதுச்சேரியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரெஞ்சு மொழியைத் தங்களது விருப்ப மொழியாக (Optional Language) எடுத்துப் படிக்கும் பிரத்யேக உரிமை இருந்து வந்தது. இது புதுச்சேரியின் உலகளாவிய அடையாளங்களில் ஒன்றாகும்.
கடந்த காலங்களில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தபோது, மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட மும்மொழிக் கொள்கை மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பிராந்திய மொழியான தமிழின் உரிமையைக் காக்கவும், பிரெஞ்சு மொழியின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும் மும்மொழிக் கொள்கை புதுச்சேரிக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆனால் 2021 ஆம் ஆண்டு புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் அரங்கேறத் தொடங்கின. புதிய கல்விக்கொள்கையின் விதிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக மும்மொழிக் கொள்கையும் அதிகாரப்பூர்வமாகப் புகுத்தப்பட்து வருகிறது.
தற்போது புதுச்சேரிப் பள்ளிகளில், குறிப்பாக சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி கற்பித்தல் என்பது தற்காலிகமாக விருப்பப் பாடமாகச் சொல்லப்பட்டாலும், நடைமுறையில் அது கட்டாயமாக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனுடன் சமஸ்கிருத மொழியைக் கற்பதற்கான மறைமுக அழுத்தங்களும் கல்வி நிறுவனங்கள் மீது செலுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் விடப் பெரும் அதிர்ச்சியாக, புதுச்சேரியின் தொன்ம அடையாளமாகவும், பிரெஞ்சு அரசாங்கத்துடனான இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவின் பாலமாகவும் விளங்கும் பிரெஞ்சு மொழியையே பாடத்திட்டத்திலிருந்து முழுமையாக நீக்குவதற்கான பணிகள் திரைமறைவில் நடந்து வருவதாகக் கல்வி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுச்சேரியில் முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சி மாற்றங்களால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மொழிப் பயன்பாட்டு மாற்றங்கல் இதோ:
அம்சங்கள் |
முந்தையது (இருமொழிக் கொள்கை முறை) |
தற்போது (மும்மொழிக் கொள்கை முறை) |
| முதன்மை மொழி | தமிழ் (தாய்மொழிக்கு முழு முன்னுரிமை) | தமிழ் (முக்கியத்துவம் குறைப்பு) |
| இணைப்பு மொழி | ஆங்கிலம் (தடையற்ற உலகளாவிய கல்வி) | ஆங்கிலம் (கூடுதல் சுமையுடன் தொடர்கிறது) |
| விருப்ப மொழி (Optional) | பிரெஞ்சு (வரலாற்று மற்றும் கலாச்சார உரிமை) | இந்தி / சமஸ்கிருதம் (மறைமுகமாகக் கட்டாயமாக்கல்) |
|
மொழி அரசியல் |
காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் எதிர்ப்பு |
என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆதரவு |
ஒரு நாட்டின் பன்முகத்தன்மை என்பது அதன் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் கொண்டாப்படுவதில் தான் இருக்கிறது. ஒரே மொழியை ஒட்டுமொத்த நாட்டின் மீதும் திணிக்க முயல்வது, பிராந்திய மொழிகளின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு மாணவர்களின் கற்றல் திறனையும் பெருமளவில் குறைக்கும்.
புதுச்சேரியின் பிரெஞ்சு மொழிப் பாரம்பரியம் என்பது வெறும் மொழி சார்ந்தது மட்டுமல்ல, அது அம்மாநிலத்தின் சுற்றுலா, உலகளாவிய கல்வி வாய்ப்புகள் மற்றும் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அங்கம். எனவே மத்திய அரசு உடனடியாக இந்த மும்மொழிக் கொள்கையைக் கைவிட வேண்டும் என்றும், மாநிலங்களின் மொழி உரிமைகளை மதித்து இருமொழிக் கொள்கையையே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மாநிலப் பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பதில்: மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன் சேர்த்து மூன்றாவதாக மற்றொரு இந்திய மொழியைக் கற்க வேண்டும் என்ற புதிய கல்விக்கொள்கையின் (NEP) திட்டமாகும்.
புதுச்சேரியில் நீண்டகாலமாகத் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே முதன்மை மொழிகளாக இருந்ததால், இந்த புதிய முறை இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மறைமுகமாகத் திணிப்பதாகக் கூறி சர்ச்சை எழுந்துள்ளது.
பதில்: புதுச்சேரியின் வரலாற்றுப் பாரம்பரியத்தின் காரணமாக, அங்குள்ள மாணவர்கள் பிரெஞ்சு மொழியைத் தங்களது விருப்ப மொழியாக (Optional Language) எடுத்துப் படிக்கும் உரிமை இருந்தது. ஆனால் புதிய மும்மொழிக் கொள்கையின் கீழ் இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், பாடத்திட்டத்திலிருந்து பிரெஞ்சு மொழியை முழுமையாக நீக்க முயற்சிகள் நடப்பதாகக் கல்வி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.