Puducherry Election | புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Puducherry Election 2026 News In Tmil: ஏப்ரல் 9 அன்று புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாதுகாப்பு கருதி புதுச்சேரியை ஒட்டிய தமிழக மதுக்கடைகளும் மூடப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 8, 2026, 07:03 PM IST
  • புதுச்சேரியில் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு, மே 4-ல் வாக்கு எண்ணிக்கை.
  • பாதுகாப்பு கருதி புதுச்சேரியை ஒட்டிய தமிழக மதுக்கடைகளும் (5 கி.மீ வரை) மூடப்படும்.
  • ஜிப்மர் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு (OPD) அன்று செயல்படாது.
Puducherry Election | புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Puducherry Assembly Election 2026 News: புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நாளை (ஏப்ரல் 9, வியாழக்கிழமை) சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் அமலில் உள்ளன. புதுச்சேரி தேர்தல் மற்றும் வாக்களர்கள் பட்டியல் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

Add Zee News as a Preferred Source

புதுச்சேரி  சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்

  1. வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 9, 2026 (வியாழக்கிழமை)
  2. வாக்குப்பதிவு நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை.
  3. வாக்கு எண்ணிக்கை: மே 4-ம் தேதி அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

விடுமுறை: வாக்குப்பதிவு நாளன்று அரசு விடுமுறை (Paid Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு (OPD) அன்று இயங்காது; அவசர கால சேவைகள் மட்டுமே செயல்படும்.

புதுச்சேரி தேர்தல் களம்: ஒரு பார்வை

புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் புதுச்சேரியின் 30 தொகுதிகளில் 117 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 40 பேர் பெண்கள்.

  1. மொத்த வாக்காளர்கள்: 9,44,211
  2. ஆண் வாக்காளர்கள் : 4,43,595
  3. பெண் வாக்காளர்கள்: 5,00,477
  4. மூன்றாம் பாலினத்தவர்: 139

புதுச்சேரி தேர்தல்  சிறப்பு ஏற்பாடுகள்

  1. பெண்கள் மட்டும் நிர்வகிக்கும் மையங்கள்: 25 வாக்குச்சாவடிகள்.
  2. இளைஞர்கள் நிர்வகிக்கும் மையங்கள்: 14 வாக்குச்சாவடிகள்.
  3. மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கும் மையம்: 1 வாக்குச்சாவடி.
  4. வீட்டிலிருந்தே வாக்களித்தல்: 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது:

தேசிய ஜனநாயக கூட்டணி: என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக. (பிரதமர் மோடி, அமித்ஷா, ரங்கசாமி பிரச்சாரம் செய்தனர்).

இந்தியா கூட்டணி: காங்கிரஸ், திமுக. (துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்).

நாம் தமிழர் கட்சி

தமிழக வெற்றி கழகம்

புதுச்சேரி தேர்தல்  பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகள்

தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் மற்றும் காவல்துறை தரப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள. அவற்றில் முக்கியமாக,  

ரோந்து பணிகள்: 30 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பறக்கும் படைகள்: 78 பறக்கும் படைகள், 40 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 50 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுக்கடைகள் மூடல்: புதுச்சேரியில் உள்ள 443 பார்கள் மற்றும் மதுக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி புதுச்சேரி எல்லையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தமிழகத்தின் (விழுப்புரம், கடலூர்) டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்.

பறிமுதல் விவரம்: இதுவரை ₹69.99 லட்சம் பணம், ₹6.13 கோடி மதிப்பிலான தங்கம்/வெள்ளி மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி தேர்தல் சைபர் கிரைம் எச்சரிக்கை!

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் புதுச்சேரியில் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடி அதிகரித்துள்ளது. வில்லியனூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் WhatsApp மூலம் வந்த போலி முதலீட்டுத் திட்டத்தை நம்பி ₹1.26 கோடியை இழந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 7 பேரிடம் இதே பாணியில் மோசடி நடந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோடை வெயில்: புதுச்சேரி வாக்காளர்களுக்கு அறிவுரை

புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பகல் நேரங்களில் சாலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகின்றன. தேர்தல் நாளன்றும் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் வாக்காளர்கள் உரிய பாதுகாப்புடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கேரளா சட்டமன்ற தேர்தல் விவரம்

140 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் இடதுசாரி முன்னணி (LDF) மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கப் போராடுகிறது. இங்கு சுமார் 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

அசாம் சட்டமன்ற தேர்தல் விவரம்

126 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக உள்ளது.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முக்கிய அறிவிப்பு

ஜிப்மர் மருத்துவமனை (JIPMER): தேர்தல் விடுமுறையை ஒட்டி, ஏப்ரல் 9-ம் தேதி புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது. அவசரப் பிரிவுகள் வழக்கம்போல் செயல்படும்.

வெயில் தாக்கம்: புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மக்கள் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சைபர் கிரைம் எச்சரிக்கை: புதுச்சேரி தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் ₹1.26 கோடியை இழந்துள்ளார். மேலும் பலரிடம் இது போன்ற மோசடிகள் நடந்துள்ளதால் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க - இளைஞர்களுக்கு ரூ.3,000... மகளிருக்கு இலவச பேருந்து - புதுச்சேரியில் ராகுல் காந்தி அறிவிப்பு!

மேலும் படிக்க - விடுதலை சிறுத்தை கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் - திருமாவளவன் அறிவிப்பு!

மேலும் படிக்க - விஜய் தவெக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதுச்சேரி தேர்தல்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறுகிறது?

புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9, 2026 (வியாழக்கிழமை) அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2. தேர்தல் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்?

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

3. வாக்குப்பதிவு நடைபெறும் நேரம் என்ன?

வாக்காளர்கள் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம்.

4. தேர்தலில் வாக்களிக்க என்னென்ன அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லலாம்?

தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) முதன்மையானது. அது இல்லாத பட்சத்தில், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு அல்லது கடவுச்சீட்டு (Passport) போன்ற அரசு அங்கீகரித்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லலாம்.

5. தேர்தல் நாளன்று பொது விடுமுறை உண்டா?

ஆம், ஏப்ரல் 9-ஆம் தேதி புதுச்சேரி முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை (Paid Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News