லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேச மாநிலம் சித்தார்த்த நகரின் கௌகன்யா பகுதியில் இருக்கும் அம்பேத்கர் சிலையில் கை பகுதி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக உத்திரப் பிரதேசத்தின் அலகாபாத் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையில் தலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.


முன்னதாக திரிபுரா தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதை அடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. பின்னர் இதனை தொடர்ந்து தமிழகத்தில் பெரியாரின் சிலையும் அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டது. 


நாட்டின் பல பகுதிகளிலும் இந்த சிலை உடைப்பு அநாகரீகம் தொடர்ந்து நிகழத் தொடங்கியது. தொடர்சியாக சிலைகள் உடைக்கப்பட்டு வந்த போதிலும் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகின்றனர்.


இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுவதை கண்டித்து மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நாட்டு மக்கள், மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையிலும் இந்து செயல்பாடுகளில் மாற்றம் நிகழ்ந்தாற் போல் தெரியவில்லை.



இந்நிலையில தற்போது மீண்டும் 2 சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் சர்சையினை எழுப்பியுள்ளது!