பெண்களுக்கு இருக்கும் உரிமை ஆண்களுக்கு ஏன் இருப்பதில்லை?
மிகவும் புகழ்கொண்ட ஓர் பிரபலம், நீங்கள் எதிர்பார நேரத்தில் உங்களுக்கு திடீரென முத்தம் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
மிகவும் புகழ்கொண்ட ஓர் பிரபலம், நீங்கள் எதிர்பார நேரத்தில் உங்களுக்கு திடீரென முத்தம் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
கேட்கும் போது சற்று வியப்பாக தான் இருக்கும், ’நமக்கெல்லாம் இது நடக்காது பா’ என உதடுகள் கூறினாலும் எப்போது நடக்கும் என்ற ஏக்கம் மனதிலிருந்து வெளியே காட்டி கொடுத்துவது உண்டு. அப்படி தான் சமீபத்தில் ஒரு நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான American Idol -ல் பங்கேற்க வந்த 19 வயது போட்டியாளருக்கு, அவர் எதிர்பாரா நேரத்தில் போட்டியில் நடுவர்களில் ஒருவரும் பிரபர பாப் பாடகருமான கெட்டி பெர்ரி (Katy Perry) முத்தம் கொடுத்துள்ளார். இந்த நிகழ்வால் சற்று தடுமாறிப் போன போட்டியாளர் பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது இசை திறமையினை காட்டினார்.
ஆரவாரம் இல்லாமல் முடிந்த இச்சம்பவம் இப்போது பலரது சர்ச்சைக்குறிய கருத்துக்களை பெற்று வருகிறது. அதாவது இச்சம்பவத்தில் முத்தம் கொடுத்தவர் பெண், எதிர்பாராமல் பெற்றுக் கொண்டவர் ஆண்.... இதேப்போன்று சமீபத்தில் இந்திய குரல் தேடல் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாப் பாடகர் பாப்பான், போட்டியில் பங்கேற்ற சிறு பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்தார் என அவர் மீது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அவரது அடையாளத்தினை மாற்றிவிட்டனர்.
காரணம் இச்சம்பவத்தில் முத்தம் கொடுத்தவர் ஆண்... பெண்களுக்கு இருக்கும் சில உரிமைகள் ஆண்களுக்கு இருப்பதில்லை என இச்சம்பவத்தினை மேற்கொள்காட்டி பலரும் கெட்டி பெர்ரியை இணையத்தில் தாலித்து வருகின்றனர்.
அது அமெரிக்க கலாச்சாரம், இது இந்தியக் கலாச்சாரம் என சிலர் சமாதானம் கூறினாலும், பாப்பான் நிகழ்வு போன்று அதே American Idol நிகழ்ச்சியில் உள்ள ஓர் ஆண் நடுவர் பெண் போட்டியாளருக்கு முத்தம் கொடுத்திருந்தால் அந்நிகழ்வு சாதாரண விஷயமாக ஏற்றுக்கொள்ள பட்டிருக்குமா?... அது கேள்விக்குறி தான்!