கோவை அம்மன் கோவில் உண்டியல் திருட்டு வழக்கில் ஒருவர் கைது!

காந்திபுறம் கோவிலில் உள்ள உண்டியலை உடைக்க முயன்ற 38 வயது ஆண் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார்!

Last Updated : Apr 28, 2018, 01:11 PM IST
கோவை அம்மன் கோவில் உண்டியல் திருட்டு வழக்கில் ஒருவர் கைது! title=

கோவை: காந்திபுறம் கோவிலில் உள்ள உண்டியலை உடைக்க முயன்ற 38 வயது ஆண் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார்!

கோவையின் காந்திபுறத்தில் இருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலில் இன்று விடியற்காலை உண்டியல் திருட முயற்சிகள் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சுமார் 38 வயது மதிப்புத் தக்க ஆண் ஒருவர் பிடிப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது அருகாமையில் இருந்த அப்பகுதி மக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். 

விசாரணையில் பிடிப்பட்ட ஆண் சிவகங்கையினை சேர்ந்த கோச்சடை பாண்டியன் என தெரிகிறது. திருட்டச் சம்பவத்திற்கு பின்னர் பணத்துடன் தப்பியோடிய அவரை அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்ததாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில... பிடிப்பட்ட பாண்டியன் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் சம்பந்தமுடையவர் என தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தின் போது அவரிடம் இருந்து சுமார் ரூ.3500 பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பாண்டியன் மீது வழக்கப்பதிவு செய்து அடுத்தக்கட்ட விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Trending News