ஒரே நேரத்தில் 6 வாகனம் அடுத்தடுத்து மோதி விபத்து!!

கோலாப்பூர் டோல் நாகா அருகே 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் போக்குவரத்து பாதிப்பு!

Last Updated : May 26, 2018, 06:29 PM IST
ஒரே நேரத்தில் 6 வாகனம் அடுத்தடுத்து மோதி விபத்து!!  title=

மகாராஷ்டிரா: கோலாப்பூர் டோல் நாகா அருகே 6 வாகனங்கள் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயமடைந்த 1 நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வாகனங்கள் இயக்கம் மீண்டும் தொடங்கியது.

இன்று மும்பை - புனே செல்லும் நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துகுள்ளகியுள்ளது. இந்த விபத்தால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

ANI தகவலின்படி, வாகனங்களுக்கிடையிலான மோதல் நெடுஞ்சாலை - ப்ளாஸா அருகே ஒரு வேகமான டிரக் திடீரான கட்டுப்பாட்டை இழந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிரக்கின் ஓட்டுனர் உடனே ப்ரேக் போட்டுள்ளார். நெடுஞ்சாலையில் டிரக்கின் பின்னால் வந்துகொண்டிருந்த வாகனங்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டது. 

இந்த விபத்தில் சுமார் ஒன்பது பேர் காயமடைந்தனர் மற்றும் அவர்களில் இருவர் ஒரு மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் சிகிச்சைக்காக பன்வெல்லில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, மும்பை டிராஃபிக் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை சரிசெய்த பின்னர் வாகன இயக்கம் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த விபத்து லொனாவலாவில் இருந்து இன்று 12 மணியளவில் சுமார் 15 கி.மீ வரை நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய மேலும் விவரங்கள் எதுவும் இல்லை! 

 

Trending News