2 Died After Hair Transplant Treatment : தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்னர், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து ஒருவர் உயிரிழந்த விஷயம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது உத்திரபிரதேச மாணவி கான்பூரில் நிகழ்ந்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
முடி மாற்று அறுவை சிகிச்சை..
தற்போதைய இளைஞர்கள் பெரும்பாலானோர் அவதிப்படுவது முடி கொட்டுதல் பிரச்சனையால்தான். ஒரு சில இளைஞர்களுக்கு, மிக இளம் வயதிலேயே தலையில் முடி இழந்து பாதிக்கப்படுகின்றனர். இதனால், சொட்டை விழுந்தது போன்று தலை காட்சியளிக்கும். எதற்காக பலர் மேற்கொள்வது தான் முடிமாற்று அறுவை சிகிச்சை. சமீப காலங்களில் பிரபலமான எந்த சிகிச்சை முறையில், பலர் பலனடைந்திருந்தாலும் அது ஒரு சிலரின் உயிரையும் மாய்த்துள்ளது. மொழி மாற்று அறுவை சிகிச்சை என்பது, முடியை எடுத்து முடி இல்லாத இடத்தில் வைக்கும் அறுவை சிகிச்சைதான். தலையில் சில இடங்களில் அடர்த்தியாக முடி இருக்கும். அவற்றை எடுத்து முடி இல்லாத இடத்தில் வைப்பது தான் இந்த சிகிச்சை முறையாகும்.
உயிரைப் பறித்த முடி மாற்று அறுவை சிகிச்சை..
உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கான்பூரில் இந்த சம்பவமானது நடந்திருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையை பல் மருத்துவர் அனுஷ்கா என்பவர் செய்திருக்கிறார். இவரிடம் சமீபத்தில் இரண்டு இன்ஜினியர்கள் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்து இருக்கின்றனர். இவர்கள் அனுஷ்கா திவாரி வைத்திருந்த கிளினிக்கில் இந்த சிகிச்சையை மேற்கொண்டு இருக்கின்றனர். சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் இவர்கள் இருவரும் உயிரிழந்திருக்கின்றனர்.
இதில் ஒரு இன்ஜினியரிங் மனைவி கொடுத்த புகாரின் பேரில்தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண் கொடுத்திருக்கும் புகாரில், உன் கணவர் முடிமாற்றார்வை சிகிச்சை செய்த பின்பு அந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டதாகவும், உயிர் இழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அவர் கடும் வலியால் அவதிப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த போது ஏற்பட்ட பிரச்சனையை, அந்த மருத்துவர் கவனிக்காமல் விட்டு இருப்பதாகவும் இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் உயிரிழந்திருப்பதாகவும் கூறி இருக்கின்றனர். இதுகுறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே இந்த கிளினிக்கில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் முன்வந்து கூறி இருக்கின்றனர். உயிரிழந்த இன்னொரு இஞ்சினியர், நவம்பர் 18ஆம் தேதி இங்கு முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். அவரும் உயிரிழப்பதற்கும் முன் நெஞ்சுவலி மற்றும் வீக்கத்தால் துடித்ததாகவும் அதற்கு மறுநாள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, இதற்கு காரணமான மருத்துவரை, போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | எங்க ஏரியா உள்ள வராத! ஒண்டி ஆளாக சிங்கங்களை விரட்டியடித்த காட்டெருமை-வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ