Instagram Influencer Guava Shuishui Dies Mysteriously : இணையத்தில் வைரலாக வேண்டும் அல்லது பிரபலமாக வேண்டும் என்ற காரணத்திற்காக பலர், பலவிதமான கண்டன்டுகளை வீடியோக்களாக பதிவிடுவர். அப்படி, வைரலான பெண் ஒருவர் தனது 24 வயதில் உயிரிழந்திருக்கிறார். இவரது உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது குறித்து சில நெட்டிசன்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
24 வயது influencer..
தாய்வானை சேர்ந்த அழகுக்கலை இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுவன்சர், Guava Shuishui. இவரை, “மேக்-அப் சாப்பிடும் அழகி” என்று பலர் குறிப்பிடுவதுண்டு. காரணம், இந்த பெண், லிப்ஸ்டிக், ப்ளஷ், ஃபேஸ் மாஸ்க் என்று பலவித மேக்-அப் ஐட்டங்களை சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு வந்தார். இவருக்கு 24 வயதாகிறது.
இவரது இந்த பிரத்யேகமான கண்டண்டை பார்ப்பதற்காகவே, பல ஆயிரம் பேர் இவரை ஃபாலோ செய்து வந்தனர். திடீரென, இவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இதில் அவர் பெரும்பாலும் மேக்-அப் பொருட்களை சாப்பிடுவது போல வீடியோக்களை போட்டு வெளியிட்டு வந்ததால், அதுதான் இவரது உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கும் என்று பலர் இணையத்தில் விவாதித்து வருகின்றனர். இவரது உயிரிழப்பானது, மே 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
காரணம் என்ன?
இந்த மேக்-அப் சாப்பிடும் பெண், அதிக கெமிக்கல் நிறைந்த காஸ்மெட்டிக் பொருட்களை அடிக்கடி சாப்பிட்டு வீடியோ போட்டு வந்தது உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்றும், அது அவருக்கு விஷமாக மாறி இருக்கலாம் என்றும் சில யூகித்து இருக்கின்றனர். ஒரு சிலர், அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
ஒரு வீடியோவில் அந்த பெண், பார்ப்பதற்கு ஜெல்லி போல இருக்கும் ப்லச்சை எடுத்து கன்னம் மற்றும் உதட்டில் தடவிக்கொண்டு பின்பு ஒரு ஸ்பூனால் அதனை எடுத்து தனது வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். இதனை அவர் சாப்பிடுவதற்கு மொறுமொறுவென இருப்பதாகவும், ஜெல்லி போல இருப்பதாகவும் கூறியிருந்தார். அதன் சுவை நன்றாக இல்லை என்றும் கூறியிருந்தார். இவரது இது போன்ற செய்கைகள் அவரது பின்தொடர்பாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.
ஒரு சிலர், இது போன்ற வீடியோக்களை இளம் வயதினர் பார்க்கும் போது, காஸ்மெட்டிக் பொருட்கள் சாப்பிடுவதற்கு எளிதானதாக இருக்கும் என்று நினைத்துக்கொள்வர் என்றும், எனவே இது போன்ற வீடியோக்களை போட வேண்டாம் என்றும் கூறியிருந்தனர்.
இவர் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு மிகுந்த உடல் நல பாதிப்புக்கு உள்ளானதாகவும், மே 24 அன்று உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்போது வரை அவர் ஏன் உயிரிழந்தார் என்பதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. இவரது உயிரிழப்பு, சீனா-தாய்வான் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க | 130 ஆபாச வீடியோக்கள்..சிக்கிய பாஜக பிரமுகரின் மகன்-நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









