)
Viral Video: அன்பிற்கும் பாசத்திற்கும் வயது உண்டா? வயதாக ஆக அன்பு பல மடங்கு அதிகரிக்கின்றது. மனதில் அன்பும், உற்சாகவும் இருந்தால் வயது என்பது வெறும் எண்ணாகிவிடும். 90-களிலும் மகிழ்ச்சியாக, பிறருக்காக வாழும் உத்வேகம் இருக்கும். அப்படி வாழும் ஒரு முதியவரின் செயல் தற்போது இணையவாசிகளை இளகச்செய்துள்ளது.
தாலி செயின் வாங்கிய 93 வயது விவசாயி
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் 93 வயதான விவசாயி ஒருவர் நகைக் கடைக்குள் நுழைந்து தனது மனைவிக்கு தாலி செயின் வாங்கும்போது நடந்த சம்பவம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் கடை ஊழியர்கள் அவரை நன்கொடை கேட்டு வந்த ஒருவராக தவறாக நினைத்தனர், ஆனால் அவரது வருகைக்கான உண்மையான காரணத்தை அறிந்ததும் நெகிழ்ச்சியடைந்தனர்.
பண்டரிபுரத்திற்கு நடைபயணமாக சென்ற தம்பதி
எளிய வெள்ளை வேட்டி-சட்டை மற்றும் தொப்பி அணிந்த நிவ்ருத்தி ஷிண்டே என்ற அந்த முதியவர், வரவிருக்கும் ஆஷாதி ஏகாதசி பண்டிகைக்காக பண்டரிபுரத்திற்கு நடைபயணமாக சென்றுகொண்டிருந்த போது, தனது மனைவி சாந்தாபாயுடன் வழியில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தார்.
என் மனைவிக்கு தாலி வாங்கணும்: மெதுவாக கூறிய முதியவர்
முதலில், அந்த முதியவரும் அவரது மனைவியும் உதவி கேட்க வந்ததாக கடை ஊழியர்கள் நினைத்தனர். ஆனால் அவர் தனது மனைவிக்கு தாலி செயின் வாங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அமைதியாக வெளிப்படுத்தியபோது அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
கடை உரிமையாளர் முதியவர் தன் மனைவி மீது கொண்டிருந்த பாசம், அவரது எளிமை ஆகியவற்றால் மிகவும் நெகிழ்ச்சியடைந்தார். அந்த நகையை அவர் அவர்களுக்கு தானே பரிசளிக்க முடிவு செய்தார். அதற்கு பதிலாக வெறும் 20 ரூபாயை மட்டும் அடையாளத் தொகையாக ஏற்றுக்கொண்டார்.
'அந்த ஜோடி கடைக்குள் நுழைந்ததும், அந்த முதியவர் என்னிடம் ரூ.1,120 கொடுத்து, தனது மனைவிக்கு ஒரு தாலி செயின் வாங்க விரும்புவதாகக் கூறினார். அவரது சைகையால் நான் மிகவும் வியப்படைந்தேன். நான் அவரிடமிருந்து ரூ.20 ஐ ஆசிர்வாதமாக வாங்கிக்கொண்டு, தாலி செயினை அந்த தம்பதியினரிடம் கொடுத்தேன்," என்று கடை உரிமையாளர் கூறினார்.
இணையவாசிகளை இளக வைத்த வீடியோ
அந்த நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோ லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைத் தொட்டது. இதற்கு இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வியூஸ் கிடைத்துள்ளன. வயதான நிலையிலும், வசதிகள் குறைவாக உள்ள போதிலும், வாழ்க்கைப் பயணத்தில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளித்து உடன் இருக்கும் அந்த வயதான தம்பதியினருக்கு இடையேயான பிரிக்க முடியாத அன்பைப் பலர் பாராட்டியுள்ளனர்.
"உண்மையான காதல் இப்படித்தான் இருக்கும்" என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், "வைரங்கள் இல்லை, ஆடம்பரமான பரிசுகள் இல்லை - வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு. இந்த அற்புதமான மனிதருக்கு வணக்கம்" என்று எழுதியுள்ளார். "இது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவசர அவசரமாக திருமணம், பின் அவசரமாக விவாகரத்து என இருக்கும் இந்த காலத்தில், இது ஒரு உண்மையான உறவுக்கான இலக்கை கற்பிக்கிறது" என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.
பலர் கடை உரிமையாளரின் தாராளமான செயலையும், அவர் மனதையும் பாராட்டியுள்ளனர். இது "அழகான கருணை மிக்க செயல்" என்றும் இன்றைய உலகில் இன்னும் உயிருடன் இருக்கும் மனிதநேயத்தின் நினைவூட்டல் என்றும் பலர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ