தெலங்கானாவில் அனிதா என்ற வனத்துறை அதிகாரியை தெலங்கான ராஷ்டீரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ கொணப்பாவின் தம்பி சரமாரியாகத் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலங்கானா மாநிலத்தின் சிர்பூர் பகுதியில் உள்ள சரசலா கிராமத்திற்கு ஹரிதா ஹாரம் மரம் நடும் திட்டத்தின் படி மரம் நடுவதற்காக வனத்துறை அதிகாரியான அனிதா சென்றுள்ளார். 


அங்கே தன்னுடன் 20 அதிகாரிகளுடன் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் மரம் நடுவதற்காக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த மக்கள் இவையெல்லாம் தங்களுடைய இடம் என்று மரம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.



இதனையடுத்து அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் கொனெரு கிருஷ்ணா ராவுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு தனது ஆட்களுடன் வந்த கிருஷ்ணா ராவ் அங்கிருந்த அதிகாரிகளை உடனடியாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். 


செய்வதறியாமல் தவித்த அனிதா அருகில் இருந்த ட்ராக்ட்டரில் ஏறியுள்ளார். அப்போது பெரிய கம்பைக் கொண்டு அவரது தலையில் ஓங்கி பல முறை அடித்துள்ளார் கிருஷ்ணா ராவ். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு தெரிவிக்கையில்., கிருஷ்ணா ராவ் வந்தவுடன் எதற்கு என்னவென்று ஒரு கேள்விகூட கேட்காமல் திடீரென்று அடிக்கத் துவங்கிவிட்டார். ஒரு அதிகாரியைக் கூட பேசவே விடவில்லை. அவர்கள் அங்கிருக்கும் அரசுக்குச் செந்தமான நிலத்தில் மரம் நடுவதற்கு சென்றுள்ளனர். ஒரு பெண் என்று கூடப்பார்க்கமால் இவ்வாறு கிருஷ்ணாராவ் தாக்கியுள்ளார் என்று தெரிவித்திருக்கிறார்.  


அனிதாவைத் தாக்கிய கிருஷ்ணா ராவ், தெலங்கானா ராஷ்ட்ர சமிதியின் சிர்பூர் எம்.எல்.ஏவான கொணப்பாவின் தம்பி ஆவார். ஒரு எம்.எல்.ஏவின் தம்பி பெண் என்று பாராமல் அரசு அதிகாரியை சரமாரியாகத் தாக்கியது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.