close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

Video: ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை போட்ட நடிகர் விஜய்!

தனது காரை பின் தொடர்ந்து வந்து ரசிகர்களை பார்த்து, பின்தொடர்ந்து வர வேண்டாம் என ரசிகர்களிடம் அன்பு கட்டணை விடுத்த நடிகர் விஜய்-ன் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது!

Updated: Mar 7, 2019, 01:23 PM IST
Video: ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை போட்ட நடிகர் விஜய்!

தனது காரை பின் தொடர்ந்து வந்து ரசிகர்களை பார்த்து, பின்தொடர்ந்து வர வேண்டாம் என ரசிகர்களிடம் அன்பு கட்டணை விடுத்த நடிகர் விஜய்-ன் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது!

தெறி, மெர்சல் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்த விஜய்-அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. பெயரிடப்படதாக விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேப், தனியார் கல்லூரி என சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்துக்கு விஜய் வரும் போது ரசிகர்களால் எடுக்கப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தனது காரை பின் தொடர்ந்து பைக்கில் வேகமாக வந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்து, பின்னர் தனது காரை பின்தொடராமல் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என்று ரசிகர்களிடம் விஜய் கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது