)
Ahmedabad Flight Crash Hostess Last Reels : அகமதாபாத்தில் ஜூன் 12ஆம் தேதி, நன்பகள் 1.39 மணியளவில், டேக்-ஆஃப் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம், இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதில் விமான ஊழியர்கள் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் உயிரிழக்கும் முன்பு செய்த ரீல்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத் விமான விபத்து:
அகமதாபாத் சர்தார் வலாபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, லண்டன் செல்வதற்காக போயீங் ரச விமானம் புறப்பட்டது. இதில் விமானிகள், பயணிகள், விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்திருக்கின்றனர். மதியம் 1.18க்கு கிளம்பிய அந்த விமானம், கிளம்பிய சில விநாடிகளிலேயே பிரச்சனைகளை சந்தித்தது. இதைத்தொடர்ந்து, 1.39 மணியளவில், பிஜே மருத்துவ கல்லூரியின் மாணவர் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்தில், ஒருவர் மட்டும் அவசர வழி வழியாக கீழே குதித்தால் உயிர் பிழைத்திருக்கிறார். மற்ற 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அறிவித்தது. இதில், பயணிகள் மட்டுமல்லாது மெஸ்ஸில் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் சிலரும் உயிரிழந்து இருக்கின்றனர்.
விமான ஊழியர்களும் உயிரிழப்பு..
விபத்துக்குள்ளான இந்த விமானத்தை, கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் க்ளைவ் குந்தர் ஆகியோர் இயக்கியிருக்கின்றனர். இவர்கள் இருவருமே, நன்கு அனுபவம் கொண்டவர்கள். விமான பணிப்பெண்களாக ரோஷினி, காத்ஹ்தோய் ஷர்மா, மிதாலி உள்ளிட்டோர் இருந்திருக்கின்றனர்.
இதில், ரோஷினி ராஜேந்திர சோங்காரே விமான பணிண்பெண்ணாக மட்டுமன்றி, இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் இருந்திருக்கிறார். இவர், தான் எங்கெல்லாம் விமானத்தில் பயணித்திருக்கிறாரோ, அவை அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்திருக்கிறார்.
வைரலாகும் ரீல்ஸ்..
தற்போது உயிரிழந்திருக்கும் ரோஷினி, தனது சக விமான பணிப்பெண்களுடன் ரீல்ஸ் எடுத்து சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டிருக்கிறார். இதில், அவர்கள் மகிழ்ச்சியாக சிரிப்பதும் கேமராவை பார்த்து போஸ் கொடுப்பதும் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. இதை பார்த்தவர்கள், இவர்கள் இப்படி ஒரே நிமிடத்தில் உயிரிழந்ததை நினைத்து வேதனைப்படுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
மணிப்பூரில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர், Nganthoi Sharma. இவர், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த இளம் விமான பணிப்பெண்களுள் ஒருவர். 21 வயதாகும் இவர், 19 வயதாக இருக்கும் போதே விமான பணிப்பெண்ணாக சேர்ந்திருக்கிறார். உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது சகோதரிக்கு போன் செய்து தனது விமானம் லண்டனுக்கு செல்ல இருப்பதாக கூறியிருக்கிறார். இதனால், சில நாட்களுக்கு தன்னால் போன் செய்ய முடியாது என்றும், ஜூன் 15ஆம் தேதிக்கு மேல் போன் செய்வதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், இதுதான் அவரது கடைசி போனாக இருக்கும் என்பது தங்களுக்கு தெரியாது என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ