வலிமை படப்பிடிப்பில் அஜித்திற்கு காயம்- ரசிகர்களை அதிர வைத்த வீடியோ!!

வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் விபத்தில் சிக்கிய வீடியோ அதிர வைத்துள்ளது.

Last Updated : Feb 19, 2020, 01:50 PM IST
வலிமை படப்பிடிப்பில் அஜித்திற்கு காயம்- ரசிகர்களை அதிர வைத்த வீடியோ!!

வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் விபத்தில் சிக்கிய வீடியோ அதிர வைத்துள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித், மீண்டும் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்திலான வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அங்கு ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கினார் வினோத். இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது சென்னையில் அஜித் சூப்பர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் அஜித் சூப்பர் பைக்கில் ஸ்டண்ட் செய்த போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. பின்னர் 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்த நடிகர் அஜித் காயத்தோடு வந்து மீண்டும் படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய காட்சிகளின் படபிடிப்பு முடிந்த பின்னர் அஜித்தின் குடும்ப மருத்துவரின் சென்று சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.

அஜித், சிலநாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு. மீண்டும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

 

 

 

More Stories

Trending News