Viral Video Of Spitting Cobra Drinking Water : இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், பல சமயங்களில் “இப்படியெல்லாம் கூட உலகில் நடக்குமா?” என்று நம்மை கேட்க வைக்கும். அதிலும், இயற்கையாக நடக்கும் ஏதேனும் ஒரு நிகழ்வோ அல்லது மனிதர்களுடன் ஒட்டி உறவாடும் காட்டு விலங்குகளையோ பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். குறிப்பாக, ஆளுயற பாம்பை, பலர் கையிலும் கழுத்திலும் சுற்றிக்கொண்டு வித்தை காட்டும் பலரும் இங்கு இருக்கத்தான் செய்கின்றனர். இங்கும் ஒருவர் அப்படித்தான் ஒரு கருநாகத்திற்கு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் கொடுக்கிறார். அந்த பாம்பும் தனது நாக்கை பயன்படுத்தி அதனை குடித்து விட்டு ஏதோ செய்கிறது. இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ..
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று பலர் கூற கேட்டிருப்போம். ஆனால், அதே பாம்பைதான் பலர் தங்களின் விரும்த்தகு விலங்குகளின் லிஸ்டில் வைத்துள்ளனர். நம் ஊரின் கிராம பகுதிகளில் கூட, பாம்பு குறுக்கே வந்தால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அப்படியே அதனுடன் பேச்சு வார்த்தை நடத்துபவர்களையும் நாம் பார்த்திருப்போம். இங்கும் அப்படித்தான் ஒருவர், கருப்பான ராஜ நாகத்திற்கு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் கொடுக்கிறார்.
அந்த நாகமும், கொடுக்கப்படும் தண்ணீரை தனது நாக்கை உள்ளே விட்டு வேகமாக அருந்துகிறது. பின்னர், டம்ளர் வைத்திருக்கும் அந்த நபரின் கை அருகே கடிப்பது போல வருகிறது. அத்துடன் அந்த வீடியோ நின்று போகிறது.
நாகம் தண்ணீர் குடிக்குமா?
தண்ணீர் பாம்பை பார்த்திருப்போம், ஆனால் தண்ணீர் குடிக்கும் பாம்பை பார்த்திருப்போமா என்று கேட்டால் அது பெரிய கேள்விக்குறிதான். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலர், “பாம்பு தண்ணீர் குடிக்குமா?” என்று கேட்டு வருகின்றனர். அறிவியில் ரீதியாக பாம்புகள் உண்மையாகவே தண்ணீர் குடிக்குமாம். இது ஒவ்வொரு பாம்பையும் வைத்து வேறுபடுமாம். பாம்புகள், தண்ணீரை நாக்கால் உருஞ்சி வைத்துக்காெண்டு பின்னர் மொத்தமாக குடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இங்கு தண்ணீர் குடிக்கும் இந்த நாகத்தின் பெயர், நாஜா நிக்ரிகோலிஸ். இவை விஷத்தை கக்கும் நாகத்தின் வகை என கூறப்படுகிறது. இவற்றை பெர்ரும்பாலும் ஆப்ரிக்காவின் சஹாரான் எனும் இடத்தில் பார்க்க முடியுமாம். இவை, 7.2 அடி வரை இருக்குமாம். இவற்றின் விஷத்தில் இருந்து மருந்துகள் கண்டுபிடிக்கப்படுமாம். இவை, தன்னை நோக்கி ஆபத்து வருகிறது என்று தெரிந்தால், இருந்த இடத்தில் இருந்து 23 அடி வரை விஷத்தை கக்குமாம். இவற்றின் விஷம், சருமத்தில் பட்டால் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படுமாம். ஆனால் கண்களில் பட்டால், கண்டிப்பாக கண் பார்வை போய்விடும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சைக்கிளில் சென்ற பாம்பு..அப்பறம் என்னாச்சு தெரியுமா? வைரல் வீடியோ..
மேலும் படிக்க | காருக்குள் உடலுறவு..வைரலான வீடியோ! கையும் களவுமாக பிடித்த காவல்துறை..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ