தனது DSP மக்களுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் தந்தை; வைரல் புகைப்படம் இதோ!
இன்ஸ்பெக்டர் தந்தை தனது DSP மக்களுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!
இன்ஸ்பெக்டர் தந்தை தனது DSP மக்களுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!
ஆந்திராவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக (Andhra Pradesh Police) பணியாற்றும் தந்தை, DSP பதவியை அலங்கரித்த தன் மகளுக்கு, கண்நீர் தழும்ப, மனதில் மகிழ்ச்சி பொங்க, சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த போட்டோ சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில், திருப்பதி சந்திரகிரி கல்யாணி டேம் பகுதியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் ஷ்யாம் சுந்தர். இவரது மக்கள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி (Jessi Prasanti). 2018 ஆம் ஆண்டு நடந்த போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று, குண்டூர் மாவட்டத்தில் காவல் உதவிக் கண்காணிப்பாளராக (DSP) பணியில் இருந்து வருகிறார். பணியின் அடிப்படையில், ஜெஸ்ஸி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார்.
இந்நிலையில், காவல்துறை சார்பில் திருப்பதியில் உள்ள, காவல் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் (APPolice1stDutyMeet) பங்கேற்பதற்காக, ஜெஸ்ஸி பிரசாந்தி சீருடையில் வந்திருந்தார். பல்வேறு தரப்பு அதிகாரிகளை வரவேற்கும் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், தனது மகள் பிரசாந்தி சீருடையில் வந்துள்ளதைப் பார்த்து சல்யூட் அடித்து வரவேற்றார்.
ALSO READ | காதலனை அடைய தனது முழு சொத்தையும் காதலனின் மனைவிக்கு எழுதி கொடுத்த காதலி!!
மகள் DSP அந்தஸ்தில் இருக்கும்போது, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இருக்கும் தந்தை ஷ்யாம் சுந்தர், கண்ணீர் மல்க, மனதில் பெருமையுடன், புன்னகையுடன் சல்யூட் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சல்யூட் அடித்து தந்தை அளித்த வரவேற்பை டி.எஸ்.பி பிரசாந்தி புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். தனது மகளுக்கு சல்யூட் அடித்தது தொடர்பாக கூறியுள்ள ஷியாம் சுந்தர், ‘‘எனக்கு இது பெருமையான விஷயம். வீட்டில் தான் அப்பா – மகள் உறவு எல்லாம். பணியின்போது மகள் எனக்கு உயர் அதிகாரி’’ என பெருமிதமாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய ஜெஸ்ஸி, ‘‘எனக்கு இது பெருமையான நிகழ்வு’’ எனக் கூறியுள்ளார். தந்தையும், மகளும் புன்னகையுடன் சல்யூட் செய்த சம்பவத்தின் புகைப்படத்தை, ஆந்திர போலீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுப் பெருமைப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஜனவரி 3 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த இடுகை நெட்டிசன்களின் பல கருத்துகளுடன் கிட்டத்தட்ட 7,000 லைக்குகளைப் பெற்றுள்ளது. சிலருக்கு ஆரோக்கியமான இடுகையைப் புகழ்ந்து பேசுவதை நிறுத்த முடியவில்லை, மற்றவர்கள் நம்பமுடியாத தந்தை-மகள் தருணங்களைப் பாராட்டினர் மற்றும் கைதட்டல் மற்றும் இதய ஈமோஜிகளால் கருத்துகள் பகுதியை பொழிந்தனர்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR