Viral Video: தினமும் சமூக ஊடக தளங்களில் பல வித வினோதமான வீடியோக்களும் புகைப்படங்களும் பகிரப்படுகின்றன. இவை நமது இறுக்கமான நாளில் சற்று புத்துணர்ச்சியை அளிக்கின்றன. இவற்றில் சில வேடிக்கையான நிகழ்வுகளைக் கண்டு மனம் லேசாகிறது.
திருமணம், திருவிழா, பயனம், சண்டை, காதல், மோதல், சினிமா, அரசியல் என பல வகையான செய்திகள் சமூக ஊடகங்க்களில் பதிவிடப்பட்டு இணையவாசிகளால் வைரல் ஆக்கப்படுகின்றன. இப்போதும் அப்படி ஒரு வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்தால் யாராலும் தங்கள் சிரிப்பை அடக்க முடியாது.
நாம் அனைவரும் பல திருமணங்களுக்கு சென்றிருப்போம். மாலை மாற்றும் வேளை வந்தவுடன் மணப்பெண்ணிடமும் மணமகனிடமும் மாலைகள் கொடுக்கப்படுவதை பார்த்துள்ளோம். இந்த வீடியோவிலும் அப்படித்தான் நடக்கிறது, ஆனால் சற்று வித்தியாசமான முறையில். ஒரு பெண் மாலைகளுடன் வந்து மணமகளிடம் ஒரு மாலையை கொடுக்கிறார். இப்போது அவர் கையில் மற்றொரு மாலை உள்ளது. அதை மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக, அவரே மணமகனின் கழுத்தில் போடத் தொடங்குகிறார்.
வீடியோவை பார்க்கும்போது அவர் தன்னையே மணப்பெண்ணாய் நினைத்துக்கொண்டுவிட்டாரோ என தோன்றுகிறது. ஆனால் உடனடியாக சுயநினைவுக்கு வந்துவிட்டார். இதைப் பார்த்ததும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்
Aunty Ji Control pic.twitter.com/X74UqGEilA
— Vivek (@Vibe__Vault_) June 2, 2025
இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @Vibe__Vault_ என்ற கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவின் தலைப்பில் 'Aunty ji control' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான வியூஸ்களும் ஏராளமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'ஆண்டி இன்னும் தன்னை ஒரு இளம் பெண்ணாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார்' என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 'ஆண்டி.... கன்ட்ரோல்' என மற்றொருவர் கூறியுள்ளார்.
(பொறுப்பு துறப்பு: இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சமூக ஊடக இடுகைகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த கூற்றுகளின் நம்பகத்தன்மையை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மேக்-அப் சாப்பிட்டு வீடியோ பதிவிட்ட பெண்..24 வயதில் மர்ம மரணம்! வைரல் செய்தி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









