ஊபர் புக் செய்த ஊழியருக்கு கிடைத்த ஷாக், கேப் டிரைவராக வந்த பாஸ்: வைரல் ஆகும் போஸ்ட்

Viral Stories: வெளியே செல்ல கேப் புக் செய்துவிட்டு, கேப் டிரைவராக பாஸ் வந்தால் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்தால், அது மிக வித்தியாசமான, விசித்திரமான அனுபவமாகத்தான் இருக்கும் என்றே கூறத்தோன்றுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2025, 11:41 AM IST
  • அஷ்டாவதானிகளாக வலம் வரும் பெங்களூரு வாசிகள்.
  • கேப் டிரைவராக வந்த டீம் லீட்.
  • அதற்காகத்தான் இந்த வேலை.
ஊபர் புக் செய்த ஊழியருக்கு கிடைத்த ஷாக், கேப் டிரைவராக வந்த பாஸ்: வைரல் ஆகும் போஸ்ட்

Viral Stories: இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம், இந்தியாவின் சிலிக்கான் வேலீ என்றெல்லாம் குறிப்பிடப்படும் நகரம் பெங்களூரு. செழித்து வளரும் ஐடி துறைக்கு மட்டுமல்லாமல், அங்கு உள்ள மக்கள் மற்றும் பிற இடங்களிலிருந்து வேலைக்காக அங்கு வந்து செட்டில் ஆனவர்களின் சுறுசுறுப்பு, லட்சியத்தை நோக்கிய ஓட்டம், துடிப்பு ஆகியவற்றுக்காகவும் பெயர்போன நகரம் பெங்களூரு. 

Add Zee News as a Preferred Source

அஷ்டாவதானிகளாக வலம் வரும் பெங்களூரு வாசிகள்

இந்த துடிப்பான சூழலில், பெங்களூருவில் உள்ள பல தொழில் வல்லுநர்கள் ஒரே வேலையுடன் நிறுத்திவிடாமல், பல வித வேலைகளை பார்ப்பது வழக்கம். மிக காஸ்ட்லியான நகரமாக இருக்கும் பெங்களூருவில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், குடும்பத்தை விட்டு தனியே உள்ளவர்கள் தங்கள் தனிமையை போக்கிக்கொள்ளவும் இப்படி அஷ்டாவதானிகளாக மாறுவதுண்டு. விருப்பம், புதிய விஷயங்களுக்கான தேடல் ஆகியவற்றுக்காகவும் சிலர் இப்படி செய்வதுண்டு.

இந்த நிலையில், சமீபத்தில் X இல் (முன்னர் ட்விட்டர்) வைரலான ஒரு பதிவு, இந்த வேகமான நகரத்தின் வாழ்க்கையின் உதாரணத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. இது பலரது கனவத்தை ஈர்த்தது. அந்த பதிவில் ஒரு WhatsApp செய்தியின் ஸ்கிரீன்ஷாட் இருந்தது. அதில் ஒருவர் தனக்கு நடந்த ஒரு தனித்துவமான அனுபவத்தை பகிர்ந்திருந்தார். இந்த அனுபவம் பெங்களூருவில் உள்ள பணி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.

கேப் டிரைவராக வந்த டீம் லீட்

ஒரு நபர் ஒரு நாள் ஊபர் செயலி மூலம் கேப் புக் செய்துள்ளார். அவரை பிக் செய்யவந்த கேப் டிரைவரை பார்த்து அவருக்கு ஆச்சரியம் மேலோங்கியது. அவரை அழைத்துச் செல்ல வந்த நபர் ஒரு சக ஊழியர் - குறிப்பாக, அவர்களின் சொந்த அலுவலகத்தின் தலைமைக் குழுவின் மூத்த உறுப்பினர். அவரை பார்த்ததும் அந்த நபரால் அதியசிக்காமல் இருக்க முடியவில்லை.

அதற்காகத்தான் இந்த வேலை...

தான் கேப் டிரைவராக வேலை செய்வதற்கு அவர் கூறிய காரணம் அந்த நபரின் ஆச்சரியத்தை இன்னும் ஆழப்படுத்தியது. அவர் கேப் டிரைவராக பார்ட் டைமில் பணிபுரிவது நிதித் தேவைக்காக அல்ல என்றும் தனது வழக்கத்தில் பன்முகத்தன்மையைச் சேர்க்கவே தான் இந்த வேலையை தேர்ந்தெடுத்ததாகவும் அந்த டீம் லீட் கூறினார். பணத்திற்கு குறைவில்லை என்றும், அன்றாட அலுவலக வாழ்க்கையின் சலிப்பான ரொடீனிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக தான் இந்த பணியை மிகுந்த ஆர்வத்துடன் செய்வதாகவும் அவர் விவரித்தார்.

ஆன்லைனில் பகிரப்பட்டவுடன், இந்த சம்பவம் பலரை ஈர்த்தது. பெரிய அளவிலான அலுவலக கூட்டங்களில் கலந்துகொண்டு பல ஊழியர்கள் கொண்ட குழுவை மேற்பார்வையிடும் ஒரு நபர், நகரத்தின் வீதிகளில் மக்களை ஏற்றிக்கொண்டு சவாரி செய்வது மிக வித்தியாசமான சுவாரசியமான ஒரு விஷயமாக பலருக்கு பட்டது. பெங்களூரு நகரத்தின் அடையாளத்தின் மையக்கருத்தாக இந்த சம்பவத்தை இணையவாசிகள் கொண்டாடினர். நெகிழ்வுத்தன்மை, கொண்டாட்டங்கள், புதுமைகள் என அனைத்தும் பின்னிப் பிணைந்த ஒரு இடமாக பெங்களூரு இருப்பதற்கு இந்த சம்பவமும் இரு சான்று.

பெங்களூரு பெருநகரத்தில் உள்ள தொழில்துறை வல்லுநர்கள் பெரும்பாலும் மாற்று முயற்சிகளை ஆராய்கிறார்கள். இதன் நோக்கம் பணமாக மட்டும் இருப்பதில்லை. மனரீதியாக ஈடுபாட்டுடன் இருக்கவும், அனுபவங்களை பன்முகப்படுத்தவும் இது உதவுகிறது. 

ஒட்டுமொத்தமாக, இந்தப் பதிவு, பாரம்பரிய வேலை எல்லைகள் நீங்கிக்கொண்டு வருவதை எடுத்துக்காட்டியது. வேறு இடங்களில் ஆச்சரியமாகத் தோன்றக்கூடியது பெங்களூருவில் கிட்டத்தட்ட வழக்கமாகிவிட்டது. லட்சியம், புத்தி கூர்மை மற்றும் தனிப்பட்ட புது முயற்சிகள் கைகோர்த்துச் செல்லும் இடமாக பெங்களூரு நகரம் இருப்பதற்கு இது ஒரு சான்றாகும்.

இந்தப் பதிவிற்கு பல விதமான கமெண்டுகள் வந்தன. பெரும்பாலான பயனர்கள் இதை நகரத்தின் தொழில்நுட்பம் சார்ந்த கலாச்சாரத்தின் பொருத்தமான எடுத்துக்காட்டாக இதை பார்த்தனர். வேலை மற்றும் விளையாட்டு, உத்தி மற்றும் தன்னிச்சையான தன்மை ஆகியவற்றின் கலவை இங்கு பலரிடம் இருப்பதை இணையவாசிகள் அங்கீகரித்தனர்.

இருப்பினும், அனைவரும் இதை அவ்வளவு வேடிக்கையாகப் பார்க்கவில்லை. சில பயனர்கள் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கும் பெங்களூரு போன்ற நகரில் ஆசைக்காக இப்படி சாலைகளில் சுற்றித் திரிவது அவசியமா என கேள்வி எழுப்பினர். இன்னும் சிலர், பொழுதுபோக்குக்காக இப்படி செய்வதாக பலர் கூறினாலும், இதன் பின்னால் வெளியே காட்டிக்கொள்ள முடியாத நிதி நெருக்கடியே உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பல வித கமெண்டுகள் வந்தாலும், வெளியே செல்ல கேப் புக் செய்துவிட்டு, கேப் டிரைவராக பாஸ் வந்தால் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்தால், அது மிக வித்தியாசமான, விசித்திரமான அனுபவமாகத்தான் இருக்கும் என்றே கூறத்தோன்றுகிறது.

மேலும் படிக்க | ரூ.5.5 LPA to ரூ.45 LPA ஆஃபர், வைரலாகும் இளைஞரின் போஸ்ட்: அரண்டுபோன நெட்டிசன்ஸ்

மேலும் படிக்க | பொய் சொல்லி சிக் லீவ் எடுத்து இன்ஸ்டா ரீலால் மாட்டிக்கொண்ட ஊழியர்: வைரல் ஆகும் போஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News